எல்லாம் கண்ணனுக்கே!

Krishnar2_Aug12

23 மே 1893, பம்பாய்
‘தாயின் கருப்பையிலிருந்து நிர்வாணமாக வந்தேன். நிர்வாணமாகவே திரும்பவும் போகிறேன்; இறைவன் கொடுத்தான், எடுத்தும் விட்டான்; அவனது திருநாமம் வாழ்க!’
- மனிதனுக்கு வரக்கூடியதில் மிகப் பெரிய துன்பங்களில் துவண்டபோது ஒரு யூத மகான் சொன்ன வார்த்தைகள் இவை.
வாழ்க்கையின் முழு ரகசியமும் இதில்தான் உள்ளது. கடலின் மேற்பரப்பில் அலைகள் புரண்டெழலாம், புயல் சீறிப் பாயலாம். ஆனால் அதன் ஆழங்களில் எல்லையற்ற அமைதி, எல்லையற்ற சாந்தம், எல்லையற்ற ஆனந்தம் நிறைந்திருக்கிறது.
‘கவலைப்படுபவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் அளிக்கப்படுவார்கள். ஏன்? தந்தையின் கதறலையோ, தாயின் புலம்பலையோ பொருட்படுத்தாமல் விதியின் கைகள் இதயத்தை இறுக்கிப் பிழிகின்றபோதும், கவலை, மனத்தளர்வு, அவநம்பிக்கை இவற்றின் சுமையால் உலகமே காலடியிலிருந்து நழுவிப் போவதுபோல் தோன்றுகிற போதும், எதிர்காலமே ஊடுருவ முடியாத துயரமும் அவநம்பிக்கையுமாகக் காட்சி அளிக்கின்ற கணங்கள் நம்மைச் சந்திக்கும்
போதுதான் அகக் கண்கள் திறக்கின்றன;
திடீரென எங்கும் ஒளி பரவுகிறது, கனவு கலைகிறது; இயற்கையின் மாபெரும் புதிரான வாழ்க்கை என்பதுடன் நாம் நேருக்கு நேர் வருகிறோம். ஆம், சாதாரண மனிதர்களை மூழ்க வைக்கிற அளவுக்குச் சுமைகள் அழுத்தும்போதுதான் வலிமை மிக்க, வீரமிக்க மேதை உண்மையைக் காண்கிறான்;
எல்லையற்ற, அறுதியான, என்றும் பேரின்ப வடிவான இறைவன் பல்வேறு மக்களால் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதையும், வழிபடப்படுவதையும் காண்கிறான். அப்போதுதான் ஆன்மாவை இத்துயரக் கூண்டுடன் பிணைத்திருந்த சங்கிலிகள் உடைந்து வீழ்கின்றன. ஆன்மா எழுந்து உயரத்தில் இறைவனின் சிம்மாசனத்தை அடைகிறது.
அங்கே ‘தீயவர்கள் துன்பம் செய்வதில்லை, களைத்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்’.
சகோதரா, ‘உமது திருவுளம்போல் நடக்கட்டும்’ என இரவும் பகலும் சொல்வதை நிறுத்தாதீர்கள், இரவும் பகலும் புகார்களை அவருக்கு அனுப்பாமல் இருக்காதீர்கள்.
ஏன் என்று கேட்பதல்ல நம் வேலை; செய்வதும் செத்து மடிவதுமே நாம் செய்ய வேண்டியது.
‘எம்பெருமானே, உமது திருநாமம் வாழ்த்தப் படட்டும். உமது திருவுளம்போல் நடக்கட்டும். இறைவா, சரணடைய வேண்டியவர்களே நாங்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
‘பரம்பொருளே, எங்களை அடிக்கின்ற கை அன்னையின் கைதான் என்பது எங்களுக்குத் தெரியும். மனம் அதனைப் புரிந்து கொள்கிறது, ஆனால் உடம்புக்கு அதனைத் தாங்குகின்ற சக்தியில்லை.
‘அன்புத் தந்தையே, எங்கள் இதய ஆழங்களின் வேதனை ஒன்று உள்ளது. அது, நீங்கள் போதிக்கின்ற அந்த அமைதியான சரணாகதியை எதிர்த்துப் போராடுகிறது. உங்கள் கண் முன்னாலேயே உங்களது குடும்பம் அழிந்து போவதை, கைகளை நெஞ்சில் இறுகக் கட்டியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
‘இறைவா, படைவீரன் எதிர்த்துப் பேசக் கூடாது, பணிவதே அவன் செய்யத்தக்கது என்பதைப் போதித்த பரம்பொருளே வருக! உங்களிடத்தில் தஞ்சம் புகுவதே வாழ்க்கையின் ஒரே லட்சியம் என்பதை அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறிய பார்த்தசாரதிப் பெருமானே வருக.
‘அப்போதுதான் நானும் அந்த மாபெரும் மனிதர்களுடன் சேர்ந்து உறுதியாக, உம்மையே தஞ்சமடைந்து, ‘ஓம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து’ (எல்லாம் கிருஷ்ணனுக்கு அர்ப்பணம்) என்று சொல்ல முடியும்’.
இறைவன் உங்களுக்கு அமைதியை அருளட்டும் என்பதே இரவும் பகலும் எனது பிரார்த்தனை.
- சுவாமி விவேகானந்தர்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s