மாணவர்கள் படிக்கும் முதல் நூல்


‘ஓர் ஆசிரியரின் வாழ்க்கையே மாணவர்கள் படிக்கும் முதல் நூல்’ என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

ஒரு மருத்துவப் பேராசிரியர் கூறிய உண்மை சம்பவம் : நான் சென்னையில் மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது மாணவர் விடுதியின் தலைவராக இருந்தேன். அப்போது அறைக்கதவுகள் உடைக்கப்பட்டு பணம் திருட்டுப் போவது அடிக்கடி நடந்து வந்தது.

விடுதி மாணவன் ஒருவன்தான் திருடி இருப்பான் என்பது நிச்சயமாகத் தெரிந்தது.
அடிக்கடி வகுப்பிற்குச் செல்வதைத் தவிர்த்து விடுதியிலேயே தங்கும் ஒருவன் மீது சந்தேகம் வந்தது. ஒரு நாள் அவன் கையுங்களவுமாய் பிடிபட்டான். சில மாணவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு வசை பாடினர். சிலர் அவனை அடிக்க முயன்றனர்.
செய்தி அறிந்து அங்கு வந்த நான் அவர்களை அமைதி காக்குமாறு கூறிவிட்டு எங்கள் அன்பிற்குப் பாத்திரமான உடற்கூறு இயல் பேராசிரியருக்குச் (டாக்டர் என்.) செய்தி தெரிவித்தேன்.

அவர் வந்தபோது அந்த மாணவன் ஒரு மூலையில் அச்சத்துடன் அவமானத்தால் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தான். போலீஸை அழைக்க விரும்புவதாக நாங்கள் பேராசிரியரிடம் தெரிவித்தோம்.

டாக்டர் என். அமைதியாக, திருடு போன பணம் எவ்வளவு? நான் அதைத் தருகிறேன்" என்றார்.
இவ்வாறு கூறிவிட்டுப் பறிகொடுத்தவர்களுக்குப் பணம் தந்தார். உடனே, இந்த விஷயம் இதோடு முடியட்டும். அவனை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று கூறிவிட்டு, அந்த மாணவனைப் பார்க்காமலேயே சென்றுவிட்டார்.

கால ஓட்டத்தில் நாங்கள் அனைவரும் பட்டங்கள் பெற்று அவரவர் வழியில் சென்றோம். இந்தச் சம்பவம் மறந்தே போயிற்று.
சில ஆண்டுகள் கழித்து நான் அதே கல்லூரியில் ஓர் ஆசிரியராக ஆனேன்.
ஒரு நாள் டாக்டர் என். மகிழ்ச்சியுடன் என்னிடம், எனக்குத் தெரியும் அவன் இதைச் செய்வான் என்று" என்றவாறு ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அக்கடிதம், முன்பு திருடிய அந்த மாணவனிடமிருந்து வந்திருந்தது. அதன் சாரம் இது:
....நான் இன்று ஒரு மனிதனாக இருக்கிறேன் என்றால் அது உங்களால்தான் டாக்டர் என்! இது எனது முதல் மாதச் சம்பளம்" என்று எழுதப்பட்டு ரூ.5000/- காசோலையும் இணைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பேராசிரியரது மகிழ்ச்சி எப்போதும் மாணவர்களது வெற்றியிலிருந்தே ஏற்பட்டது. தன்னைத் திரும்ப மீட்டுக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பை அந்த மாணவன் நழுவ விட
வில்லை என்ற செய்தியைக் காட்டிலும் அவருக்கு விலையுயர்ந்த பரிசு வேறொன்று இருக்க முடியாது.

மாணவர்களின் சக்தி மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றும் ஆசிரியர்களின் நம்பிக்கை ஒருபோதும் வீணாவதில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s