ஆசிரியர் நினைத்தால்!


ஒரு மாணவனின் மனம் எழுதப்படாத கரும்பலகை. ஆசிரியர் ஆக்கபூர்வமான எழுத்துக்களை அதில் எழுதிவிட்டால், வாழ்நாள் முழுவதும் மாணவர்கள் அதை நினைவில் கொள்வார்கள்.
‘சம்ஸ்கார்’ என்னும் சேவை அமைப்பு இந்திய கலாச்சாரம் - பண்பாட்டை ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களுக்குப் போதித்து வருகிறது.
ஒருமுறை ‘பெரியோர்களை மதித்தல்’ என்ற நிகழ்ச்சியில், மாணவர்களிடம் காலையில் எழுந்ததும், படுக்கும் முன்னரும் பெற்றோர்களை வணங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஒரு மாணவன் மட்டும், மாட்டேன். நான் என் அப்பாவை வணங்க மாட்டேன். அவர் குடித்துவிட்டு வந்து என்னையும் அம்மாவையும் அடிக்கிறார்.
எங்களைப் பற்றி கவலைப்படாதவர் பற்றி எனக்கு அக்கறையில்லை" என்றான்.

becoming-teacher

ஆசிரியர்: தம்பி, உன்னை எவ்வளவு மோசமாக நடத்தினாலும் அவர் உன் அப்பாதானே! நீ அவரை நேசிக்கத்தான் வேண்டும். மதிக்க முயற்சி செய்.
சிறுவன் ஆசிரியர் மேல் மதிப்பு கொண்டவன். எனவே நிலைமை எப்படி இருந்த போதிலும் அவன் தவறாமல் தன் பெற்றோரை வணங்க ஆரம்பித்தான். சில நேரங்களில் அவனது தந்தை அவன் தன்னை வணங்குவதைக்கூட கவனிக்க இயலாத அளவுக்கு மிதமிஞ்சிக் குடித்துக் கிடப்பார்.

சில மாதங்களுக்குப் பின் ஒரு நாள் அந்தத் தந்தை ஆசிரியரைச் சந்தித்து, நீங்கள் என்ன காரியம் செய்துவிட்டீர்கள்! நான் எதற்கும் லாயக்கில்லாதவன். குடும்பம் பற்றிக் கவலைப்படாதவன். என்னை வணங்கும்படி என் மகனிடம் நீங்கள் சொன்னீர்களாமே! அவன் காலில் விழுந்து வணங்கும் போதெல்லாம் என் மனம் குறுகுறுக்கிறது. அவனுக்காக நான் எதுவுமே செய்ததில்லை. தயவுசெய்து என் காலில் விழுந்து வணங்குவதை நிறுத்தும்படி அவனிடம் சொல்லுங்கள்” என்றார்.

ஆசிரியர் : அது முடியாது. பெற்றோரை மதிப்பது நல்ல பழக்கம். குடிப்பது நல்லது என நீங்கள் நினைக்கிறீர்கள். நம் கலாசாரம் நல்லது என நாங்கள் நம்புகிறோம். வேண்டுமானால் ஒரு யோசனை கூறுகிறேன். முயன்று பாருங்கள். இனி திங்கட்கிழமைகளில் குடிக்காதீர்கள். பின் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

அந்த ஆலோசனைக்குத் தலையாட்டிவிட்டு தந்தை சென்றுவிட்டார். மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திரும்ப வந்து ஆசிரியரிடம் அவர் கூறினார்:

சார்! நீங்கள் சொன்னபடி நான் திங்கட்கிழமைகளில் குடிப்பதை விட்டுவிட்டேன். இப்போது எனக்கு திங்கட்கிழமைதான் சிறந்த நாளாகத் தெரிகிறது. என் மகன் என்னை வணங்கும்போது எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருக்கிறது.”

ஆசிரியர்: திங்கட்கிழமைகளில் குடிக்க வேண்டும் என்ற வேகம் உள்ளதா?
தந்தை : இல்லை சார்!
ஆசிரியர்: அப்படியென்றால், நீங்கள் ஏன் புதன் கிழமையும் குடிப்பதை நிறுத்திவிடக் கூடாது? திங்கட்கிழமைகளில் அனுபவிக்கும் மகிழ்ச்சியைப் புதன்கிழமைகளிலும் அனுபவிக்கலாமே!
இந்த யோசனை தந்தைக்குச் சரி எனப்பட்டது. அதை வெற்றிகரமாகக் கடைப்பிடித்தார். இப்படியாக இரண்டாண்டில் மெல்ல மெல்ல ஒரு பெருங்குடியன் திருந்தினார்; பொறுப்புமிக்க தந்தை ஆனார்.

ஆம் ஆசிரியர்களே, ஒரு மாணவனை மட்டுமல்ல ஒரு குடும்பம் முழுவதையுமே நீங்கள் மாற்ற முடியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s