நீ மூன்றாவதாக இரு!

நீ மூன்றாவதாக இரு!
thirddec12

பாப் என்பவன் மிக புத்திசாலி. கல்லூரியில் அவன் தனது திறமையால் மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
பாப் கடவுள் பக்திமிக்கவன். தகுதியான நபர்களுக்குத் தகுந்த நேரத்தில் உதவுவதில் வெகு சமர்த்தன். சகமாணவர்களும் பேராசிரியர்களும்கூட அவனிடம் மரியாதையோடு பழகுவார்கள்.

ஒரு நாள் அவனது வீட்டிலிருந்து பாப்பிற்கு ஒரு பெட்டி வந்தது. அதில் நிறைய தின்பண்டங்கள் இருந்தன. பாப் நண்பர்களை விருந்திற்கு அழைத்தான்.

அச்சமயம் அவனது மேசையின் மேல் சட்டம் போட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு வாசகத்தை அவனது நண்பர்கள் கவனித்தனர். ‘I am Third’- ‘நான் மூன்றாவது’ என்பதுதான் அது.

எல்லோரது பார்வையும் அந்த வார்த்தைகளையே உற்று நோக்கின. நண்பர்கள் ஆர்வத்துடன், பாப், இதன் பொருள் என்ன?” என்று கேட்டார்கள்.

நண்பர்களே! உண்மையிலேயே நான் ஒரு பாக்கியசாலி. எனக்கு உணவோடு உணர்வையும் ஊட்டி வளர்த்தவள் என் தாய். உங்கள் எல்லோரின் அன்பிற்கும் நான் பாத்திரமானது அவள் எனக்குத் தந்த பயிற்சியால்தான். நான் பள்ளிப் படிப்பை முடித்த பின்பு எனது வீட்டை விட்டு இந்தக் கல்லூரிக்கு வந்தபோது என் தாய் கூறினாள்:
‘பாப், இந்த வாக்கியத்தை நன்கு பார்க்கும்படியான ஓர் இடத்தில் வைத்துக்கொள்.

  1. ‘மகனே! கடவுளே எப்போதும் உன் வாழ்க்கையில் முதன்மையானவராக இருக்கட்டும்.
  2. ‘மற்றதெல்லாம் இரண்டாவது இடத்தில் வரட்டும்.
  3. ‘நீ எப்போதுமே மூன்றாவதாகவே இரு’.

நண்பர்களே, என் தாய் கூறியவற்றை எப்போதும் மனதில் பதித்துக் கொள்வேன்” என்று உணர்ச்சி ததும்ப பாப் கூறினான்.
ஒருவர் நல்லவனாகவும் சிறந்த நண்பனாகவும் இருப்பதற்கான ரகசியம் இப்போது புரிகிறதா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s