சிறப்புச் சிறுகதைப் போட்டி

நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறப்புச் சிறுகதைப் போட்டி

கதைகளை அனுப்ப கடைசி தேதி : 25.7.2014

முதல் பரிசு ரூ.10,000/-
இரண்டாம் பரிசு ரூ. 8,000/-
மூன்றாம் பரிசு ரூ. 6,000/-
5 ஊக்கப் பரிசுகள் ரூ. 2,000/- வீதம் ரூ. 10,000/-

அனுப்ப வேண்டிய முகவரி :
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்,
31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600004.
Email : sriramakrishnavijayam@gmail.com

நமது சனாதன பாரம்பரியத்தைக் கட்டிக் காத்து வரும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதா தேவி,
சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், அருளாளர்களின் சரித்திரங்கள், உபதேசங்கள் மற்றும் நமது சாஸ்திரங்கள் யாவும் இன்றும் மக்களுக்கு வழிகாட்டி வருகின்றன;

சிக்கலான சமயங்களில் அவர்களுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் வழங்கி வருகின்றன.

காலத்தைக் கடந்த அந்தப் புனிதர்களின் உபதேசங்கள் மற்றும் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் ‘கரு உண்மை; உரு கற்பனை’ என்ற வடிவில் பல சிறுகதைகள் வெளியாகி வருகின்றன.

இந்த அமைப்பில் சேவை, தியாகம், பக்தி, ஞானம், மனிதநேயம், தேசபக்தி, சமுதாயப் பொறுப்பு, சமய நல்லிணக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும் சிறுகதைகளைப் படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்கிறோம்.

உலகிலுள்ள எந்த சிறந்த சாஸ்திரங்களின் சிந்தனைகளாக இருந்தாலும், அவை எவ்வாறு நடைமுறையில் செயல்வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் சிறுகதைகளை எழுதி அனுப்புங்கள்.

உங்களது சிறுகதைகளை அனுப்பும்போது
* சாஸ்திரங்களின் கருத்துகளையோ, மகான்களின் சம்பவங்களையோ கூறும் போது ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள்.
* எல்லா வயதினரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
* ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் இருக்க வேண்டும்.
* கதைகளை தபாலிலோ, இ-மெயிலிலோ அனுப்பலாம்.
* இணைய தளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவை ஏற்க இயலாது.
* தேர்வாகாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.
* போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை முடிவு தெரியும்வரை வேறெந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப்படவில்லை என்ற உத்தரவாதம் தேவை.
* பரிசுக்குரிய கதைகளைநடுவர் குழு தேர்ந்தெடுக்கும்.
ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
* முடிவு வெளியாகும் வரை கடிதம், தொலைபேசி, இ-மெயில் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்.

முடிவுகள் செப்டம்பர் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.
-ஆசிரியர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s