முன்னேற என்ன செய்ய வேண்டும்?

கேள்வி: நான் ஒரு சராசரி மாணவன். நன்கு படிக்க வேண்டும் என ஆவல். ஆனால் அந்த ஆவல் அடிக்கடி சிதைகிறது. நான் முன்னேற என்ன செய்ய வேண்டும்?

பதில்: தம்பி, உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். ‘நான் தற்போது சுமாராகத்தான் இருக்கிறேன்; இன்னும் முன்னேற வேண்டும்’ என்று ஆசைப்படுவது நல்ல முதிர்ச்சி.

வெற்றி பெறத் துடிப்பவருக்கு மூன்று அவசியம்.

1. மன ஒருமை Concentration of Mind: சிதறிக் கிடக்கும்வரை மனமும் மனிதனும் ஆட்டுமந்தைகளே. முதலில் உங்கள் மனதைச் சிதறடிக்கும் விஷயங்களைப் பட்டியலிடுங்கள். அவ்வப்போது அதைப் பார்த்து எவையெல்லாம் மனதை அதிகம் சிதறடிக்கின்றன என்பதைக் கண்டு அதைச் சிதையிலிடுங்கள். அதற்கு மன ஒருமைப்பாடு தேவை.

2. மன வலிமை Strength of Mind: சிதறியுள்ள மனம் ஆட்டுமந்தை என்றால், வலிமையின்றி சிந்திக்கும் திறனற்ற மனம் ‘வாத்துமடையன்’ போன்றது. (ஒரு வாத்தினைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டால் மற்ற வாத்துக்கள் யாவும் தாங்களும் இறந்துவிட்டதாக நினைக்குமாம்.)
‘எவையெல்லாம் உன்னைப் பலவீனப்படுத்துகின்றனவோ, அவற்றை உன் கால் விரலாலும் தீண்டாதே’ என்றார் சுவாமி விவேகானந்தர்.
தம்பி, படிப்பில் மனதைச் செலுத்தத் திடமாக முடிவெடுங்கள். அந்த முடிவை நிறைவேற்ற மனதை வசப்படுத்துங்கள். உங்களைப் பலவீனமாக்குவதில் முக்கியமானது டி.வி.-யாகவோ, கிரிக்கெட்டாகவோ இருக்கலாம்.
அது போன்றவற்றுக்கு எவ்வளவு குறைவான அளவு – மனதைக் குழப்பாத அளவு – அந்த ஆசைகளை நிறைவேற்ற முடியுமோ, அந்த அளவு மட்டுமே கவனம் கொடுங்கள். மனவலிமை கூடும்.

3. மன அமைதி Peace of Mind: முழுமனதோடு படியுங்கள். படித்ததைக் கிரகித்து திடப்படுத்துங்கள். பிறகு சஞ்சலமில்லாமல் மனதையும் மூளையையும் அமைதியாக விட்டுவிட்டால், நீங்கள்தான் வெற்றி வீரர். இறைவனிடம் சிறிது பிரார்த்தித்தால் இன்னும் அதிக மனஅமைதி பெறலாம்.

பசுவிடமிருந்து பால் கறப்பது மன ஒருமை என்றால், அதைக் காய்ச்சி அருந்துவது மன வலிமை ஆகும். பின் உறை ஊற்றி, தயிர், வெண்ணெய், நெய் என்று பலவும் உங்களுக்குக் கிடைக்கச் செய்வது மன அமைதி.
உங்கள் படிப்புதான் உங்கள் பசு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s