மாணவனே, நீ தீப்பந்தா? கால்பந்தா?

மாணவனே, நீ தீப்பந்தா? கால்பந்தா?

கேள்வி: 1. நான் ஏதாவது சாதிக்க வேண்டும். ஆனால் என்னை ஊக்கப்படுத்த ஆள் இல்லை. என் ஆசிரியைகளிடம் கூறினால், அவர்கள் encourage செய்யாமல் discourage செய்கிறார்களே?
கேள்வி: 2. ஒரு குடும்பத்தில் நன்கு படிக்கும் குழந்தையிடம் பெற்றோர் மிக்க அன்புடன் உள்ளனர். ஆனால் சுமாராகப் படிக்கும் பிள்ளையிடம் அப்படி நடந்து கொள்வதில்லையே?
* பள்ளியில் வாத்தியார் படி, படி என்கிறார். வீட்டில் அப்பாவும் படி, படி என்கிறார். ‘படி, படி’ என்று கூறும்போது, ‘கடி, கடி’ என்று கூறுவதாகத் தோன்றுகிறது? நான் என்ன செய்வது?

பதில்: நீ நல்ல தம்பி அல்லவா, டென்ஷன் ஆகாதே! படிப்பதற்குப் பதிலாக, கடித்துவிட்டால் நீயே நிரூபிக்கிறாய் ‘நீ மனிதன் அல்ல, மிருகம்’ என்று.

உங்களுக்கு பதில் சொல்வதைவிட உங்கள் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் பதில் தருகிறேன். இதை அவர்களிடம் தயவு செய்து காண்பியுங்கள்.
பெற்றோர்களே! ஆசிரியர்களே! வாழ்க்கை என்பது ஒரு பெரிய விளையாட்டு மைதானம். அதில் நீங்கள் இரு குழுக்களாக இருந்து விளையாட வந்த வீரர்கள். மாணவன் உங்கள் இருவருடன் விளையாட – உங்களிடம் பயிற்சி பெற வந்துள்ள புதிய வீரன். அறிவு, தெளிவு போன்றவற்றை ஆசிரியர்களிடமிருந்தும், அன்பு, பண்பு போன்றவற்றை அப்பா அம்மாவிடமிருந்தும் அவன் கற்க வேண்டும்.

ஆனால் உண்மையில் நடப்பது என்ன? உங்கள் இளம் விளையாட்டு வீரனை வீரனாக்க வேண்டிய நீங்களே உள்ளீடற்ற, உள்ளே ஒன்றுமில்லாத ஓர் உதைபந்தாக நினைக்கிறீர்கள். உள்ளீடற்ற தன்மை என்பது என்ன?

football

மாணவன் சுயமாக எதையும் சிந்திக்க முடியாதபடி, ‘நீ டாக்டர் ஆகணும், கலெக்டர் ஆகணும்’ என்றெல்லாம் கூறி, அவனுக்கு நெருக்குதலை உண்டாக்குவது.

பள்ளியில் என்ன நடக்கிறது? 100% தேர்ச்சி காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில், ‘பெயிலானால் தொலைத்து விடுவேன்’ என்று மாணவனை மிரட்டி, டென்ஷனாக்கி அங்கும் அவன் நெருக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறான்.
இந்த இரண்டு வகை நெருக்குதல்களின் நடுவே மாணவன், வீட்டிலிருந்து பள்ளிக்குப் போவதும் – பள்ளியிலிருந்து வீடு திரும்புவதும் எப்படி உள்ளது தெரியுமா?

எதிரெதிர் அணியினர் பந்தை ஒரு மூலையிலிருந்து மறுமூலைக்கு உதைப்பதும், பின் மீண்டும் அதே மூலைக்கே பந்தை உதைப்பதும் போல் உள்ளது.
கால்பந்தாட்ட வீரனாக வேண்டி வந்தவன், கால்பந்தாகவே மாறிவிடுகிறான். இது கற்பனை அல்ல. கவனித்துப் பார்த்தால் காணக்கூடியதுதான் இது.

பெற்றோரும் ஆசிரியரும் மகனையும் மகளையும் – மாணவனையும் மாணவியையும் வளர்ப்பதில் எப்படிப் பங்காற்ற வேண்டும் என்று கேட்கிறீர்களா?

ஆசிரியர்களே! பெற்றோர்களே! நீங்கள் இருவரும் உங்களை ஓட்டப்பந்தய வீரர்களாகக் கருதிக் கொள்ளுங்கள்.
ஒரு விளையாட்டு விழாவில் முக்கியமான வீரர் ஒருவர் ஜோதியைக் கையில் ஏந்தி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு ஓடுவார். குறிப்பிட்ட இடம் வந்ததும் அவரிடமிருந்து மற்றொருவர் அதை வாங்கிக் கொண்டு ஓடுவார்.

olympic

பெற்றோரே, உங்கள் மகன் ஒரு தீப்பந்தம். அவனுக்கு அன்பு என்ற எண்ணெயைத் தினமும் ஊற்றுங்கள்; நெறியற்ற வாழ்க்கைமுறை என்ற காற்றில் அந்த ஜோதி அணைந்து விடாதிருக்க, தெய்வ நம்பிக்கை என்ற பாதுகாப்பு கொடுங்கள். பிறகு, அந்தத் தீப்பந்தத்தை வீட்டிலிருந்து பள்ளிக்குக் கொண்டு சென்று ஆசிரியர் என்ற அடுத்த விளையாட்டு வீரரிடம் கொடுங்கள்.

ஆசிரியரே, நீங்கள் அறிவு என்ற எண்ணெயை அந்த ஜோதியில் ஊற்றுங்கள்; சஞ்சலம், அதைரியம் மிக்க வாழ்க்கைமுறை என்ற சூறாவளி அந்த அக்னியை அணைத்து விடாமலிருக்கத் தன்னம்பிக்கை என்ற பாதுகாப்பைத் தயவு செய்து தாருங்கள்.

பின்னர் பள்ளியிலிருந்து மாணவன் என்ற தீப்பந்தத்தை வீட்டிற்கு அனுப்புங்கள்.
இவ்வாறு இருவரும் சேர்ந்து பொறுப்புடன் மாணவனைப் பிடித்துக் கொண்டு ஓடி அவனை ஜகஜ்ஜோதியாகப் பிரகாசிக்கச் செய்யுங்கள்.

இல்லையென்றால் அவன் வாழ்க்கையில் உள்ளீடற்ற ஒரு பந்தாக மாறி உதைபட்டே உருண்டோடுவான்.
ஆகவே பெற்றோரே! ஆசிரியரே! இப்போதே முடிவெடுங்கள். மாணவனை எதுவாக மாற்றப் போகிறீர்கள்?

பந்தாகவா? பந்தமாகவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s