இளமையில் கல்

கேள்வி : ‘இளமையில் கல்’ என்றால் என்ன?

பதில்: ஒரு கதை. ஓர் ஆசிரியை எல்லா மாணவர்களிடமும் சமமாக அன்பு செலுத்தி வந்தார். ஆனால் திவாகர் என்ற மாணவனிடம் மிகுந்த அக்கறை காட்டினார்.
இது ஏழுமலை என்பவனிடத்தில் பொறாமைத் தீயை வளர்த்தது. ஆசிரியை ஓர வஞ்சனை செய்கிறார் என்று அவரிடமே சென்று கூறினான் அவன்.

ஆசிரியை, திவாகரைத் தான் நேசிப்பது ஏன் என்பதை விளக்க ஒரு சோதனை வைத்தார். ஒரு பாத்திரம். அருகில் ஒரு பக்கெட் நீர், சிறு மூட்டையில் மணல், கொஞ்சம் கூழாங்கற்கள் மற்றும் ஒரு பாறாங்கல் ஆகியவை இருந்தன.
ஆசிரியை ஏழுமலையிடம், ‘இந்தப் பாத்திரத்தில் இந்த நான்கையும் சரியாக வைக்க வேண்டும். எதுவும் விரயமாகக் கூடாது. எங்கே செய், பார்க்கலாம்?’ என்று கூறினார்.

இதென்ன பிரமாதம். இதோ ஒரு நொடியில் செய்கிறேன்” என்ற ஏழுமலை, பரபரப்பாக முதலில் நீரை பாத்திரத்தில் ஊற்றினான். கூழாங்கற்களை அதில் கொட்டினான். நீர் மட்டம் ஏறியது. அதே வேகத்தில் மணலையும் கொட்டினான். மேலும் நீர் மட்டம் ஏறியது. முடிவில் கனமான பாறாங்கல்லை வைத்தான்.
உடனே பாதி நீர் வெளியே சிந்திவிட்டது. சோதனையில் ஏழுமலை தோற்றுவிட்டான்.

goal

ஆசிரியை அமைதியாக அவனை நோக்கி, திவாகரைக் கூப்பிட்டு வரச் சொன்னார். திவாகர் வந்ததும் இதே சோதனையை அவனிடமும் கூறிச் செய்யச் சொன்னார்.
திவாகர் ஒரு கணம் சிந்தித்தான். முதலில் பாத்திரத்தில் பாறாங்கல்லை வைத்தான்; பிறகு கூழாங்கற்களைக் கொட்டினான்; மணலைக் கொட்டி லேசாகப் பாத்திரத்தை ஆட்டினான். பின் நீரை அதில் மெதுவாக ஊற்றினான். பாத்திரம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு நிறைவாக இருந்தது. எதுவும் வீணாகவில்லை.
சபாஷ் திவாகர்” என்று ஆசிரியை பாராட்டி விட்டு இரு மாணவர்களிடமும் பேசினார்: நீங்கள் இருவரும் எனக்கு முக்கியமானவர்களே. இருந்தாலும் திவாகர் அறிவில் சிறந்தவனாக இருப்பதால் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறேன்.

இந்தச் சோதனையில் ஒரு முக்கிய செய்தி உள்ளது. பாத்திரம் என்பது உங்களது வாழ்க்கையைப் போன்றது. கூழாங்கற்கள் என்பவை, ‘நான் கலெக்டர் ஆகணும், டாக்டர் ஆகணும்’ என்பது போன்ற நீங்கள் விரும்பும் உங்களது நல்ல விருப்பங்கள்; மணல், உங்களது சுறுசுறுப்பைக் குறிக்கும். நீர் என்பது மகிழ்ச்சியைக் குறிக்கிறது.”
அதற்குள் திவாகர், பாறாங்கல் எதைக் குறிக்கிறது டீச்சர்?” என்று கேட்டான்.

வேறு என்ன? நல்ல விருப்பங்கள் நிறைவேறி சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமென்றால், ஆசை என்னும் பாறாங்கல்லைப் பாத்திரத்தில் வைக்க வேண்டும். அதுதானே மேடம்?” என்றான் ஏழுமலை.
இல்லை ஏழுமலை, வெறும் ஆசைகளைக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்துவிட முடியாது. பாறாங்கல் என்பது சுமப்பதற்குச் சிரமமாக உள்ள லட்சியத்தைக் குறிக்கிறது.

சிறுவயதிலேயே உங்கள் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களை நீங்கள் கொண்டிருந்தால்,பிற அனைத்தும் தாமாகவே சரியான நேரத்தில் தேவையான அளவிற்கு வந்து அமையும்.
அதை விட்டு, ஆரம்பத்திலேயே பாத்திரத்தில் நீரை ஊற்றிவிட்டால் – அதாவது இளமையிலேயே மகிழ்ச்சியை மட்டும் தேடினால் – கடைசியில் பாறாங்கல்லைத் தூக்கிப் பாத்திரத்தில் வைக்கும்போது நீர் பெருமளவிற்கு விரயமாகத்தான் போகும்” என்றார்.

இளமையில் கல் என்பது சிறுவயதிலேயே ஒருவர் படிப்பில் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும்; சிறுவயதில் படிப்பது பசுமரத்தாணி போல் பதியும் என்பவை பொதுவான கருத்துகள்.
இந்தக் கருத்துகளுடன், இன்னொரு கருத்தையும் ஏற்றுக்கொள். லட்சியம் எனும் பாறாங்கல்லை ஒருவர் இளமையிலேயே ஏற்க வேண்டும் என்பதால்தான் ‘இளமையில் கல்’ எனப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s