எப்படிப் பேச வேண்டும்?

எப்படிப் பேச வேண்டும்?

பேசும் சக்திதான் மனிதனை பிற உயிரினங்களில் இருந்து உயர்த்தி உள்ளது. பேச்சுதான் மனிதனுக்குப் பலம். அதுவே அவனுக்குப் பலவீனமும் ஆகும்.

ஔவைப்பாட்டி தம் ஆத்திச்சூடியில் 16 இடங்களில் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது, எப்படிப் பேசக் கூடாது என்று எடுத்துரைக்கின்றார்.

1. பிழைபடச் சொல்லேல் – தவறு ஏற்படும்படியான சொற்களைக் கூறாதே.
2. உடையது விளம்பேல் – உன் பலம் மற்றும் பலவீனங்களை வெளியில் காட்டாதே.
3. வாது முற்கூறேல் – வலியச் சென்று எவரையும் விவாதத்திற்கு அழைக்காதே.
4. கண்டொன்று சொல்லேல் – பார்த்ததை விட்டு மற்றதைக் கூறாதே.
5. வஞ்சகம் பேசேல் – வஞ்சகமாகப் பேசாதே.
6. ஓரஞ்சொல்லேல் – ஒருதலைப்பட்சமாக எதையும் கூறாதே. என்றும் மனதில் நடுநிலை உணர்வு இருத்தல் அவசியம்.
7. ஞயம்பட உரை – எதையும் கனிவாகக் கூறு.
8. பழிப்பன பகரேல் – பிறரைப் பழித்துப் பேசக் கூடாது.

Swami Vivekananda

9. மொழிவது அறமொழி – தர்மத்தைப் பேசு.
10. சொற்சோர்வு படேல் – உற்சாகம் குறைந்து எவரிடமும் பேசுதல் கூடாது. அது அடுத்தவரையும் சோர்வு கொள்ள வைக்கும்.
11. வல்லமை பேசேல் – உன் வலிமையை நீயே கூறிக் கொள்ளாதே.
12. நோய்ய உரையேல் – பிறர் மனம் நோகும்படிப் பேசக் கூடாது.
13. சித்திரம் பேசேல் – பொய்யை உண்மைபோல் திரித்துப் பேசாதே.
14. சுளிக்கச் சொல்லேல் – பிறர் முகம் கோணும்படிப் பேசாதே.
15. மிகைப்படச் சொல்லேல் – எதையும் பெரிதாக்கிக் கூறாதே.
16. வெட்டெனப் பேசேல் – வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுதல் முறையல்ல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s