உன் மயமாக!!!

reflection

என்னைத் தெய்விகம் ஆக்குவாய்!
மேதை போல் பாசாங்கு செய்ய வேண்டுமா?
பாயாசம் குடிப்பது போல அதற்கு!
பெயர் புகழுக்குப் பின் ஓட்டமா?
முன்னின்று நடத்துவது அதுவே!
பொய் சொல்லச் சந்தர்ப்பமா? அதைப்
பொறுப்பாய் முடித்து வைக்கும்!
பொருள்களில் ஆசையா?
அஸ்திவாரமே அதற்கு அதுதானே!
பிற உடல் மீது காமமா?
உள்ளிருந்து உற்பத்தி செய்வதே அதுதான்!
என்னைக் கொல்லாமல் கொல்லும் அது யார்?

கடவுளை நம்பு என்றாலோ,
அது மட்டுந்தானே செய்கிறேன் என்று கூறும்!
அமைதியாய் இரு என்றால்,
அடியேனுக்கு வேறென்ன தெரியும் என்கிறது!
பிரார்த்தனை செய்வாயா எனக் கேட்டால்,
என் மூச்சே அதுதான் என்று புளுகும்!
பிறரை நேசியேன் என்றால், எனக்கு
யாரையும் வெறுக்க வராதே என்கிறது!
செய்வது ஏதோ ஒரு காரியம், அது
எதிர்பார்க்கும் புகழோ ஓராயிரம்!
என்னுள்ளிருந்து கொல்லும் அந்த எமன் யார்?

தன் முன்னே பிறர் பாராட்டப்பட்டால்,
எல்லாம் மாயை என உபதேசிக்கும்!
மாலை மரியாதை தனக்குக் கிடைத்தாலோ,
காலைத் தூக்கித் தூக்கிக் குதிக்கும்!
அறிவாளி நீயே என்று சொல்லிவிட்டால்,
அதிசயத்துடன் பார்க்கும்,
பிறரும் இதை இன்னும்
புரிந்து கொள்ளவில்லையே என்று!
என்னை எனக்கே எமனாக்கும் அது யார்?

நாதியற்றவன் என்று என்னை அது
நெகிழ வைக்கும் ஒரு கணம்!
உலகமே என் காலடியில் என
புரள வைக்கும் மறுகணம்!
பெண்ணைப் பார்த்துவிட்டால்
ஆண் நீயே என என்னை அலையச் செய்யும்!
சிந்திக்க வேண்டி வந்தால்
செய்வதறியாது தடுமாறும்!
சேவை செய்யும்போது தன்னை மட்டும்
காட்டிக் கொள்ளத் துடிக்கும்!
என்னைச் சிறுகச் சிறுகக் கொல்லும் அது யார்?

என் முன்னேற்றத்தை எல்லாம் முடக்குவது
முனைப்பே-தன்முனைப்பே!
‘நான்’ மயமாக உள்ள என்னைத்
தன் மயமாக - உன் மயமாகச்
செய்தருள்வாய் இறைவா!

‘நான்’ இருந்தேயாக வேண்டுமென்றால்,
உன் நாமமான நாராயணனின்
நடு எழுத்துகளை நீக்கினால்
எப்படியோ, அப்படியே இருக்க
அருள்வாய் ஆண்டவனே!
- பாமதிமைந்தன்

One response to “உன் மயமாக!!!

  1. Written very nicely. How we get deceived by our own self is reflected nicely. something to be read , re-read and remembered and kept in mind when we talk to our own selves. thanks to the author.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s