Love like a Master

நீ எஜமானனா? அடிமையா?

தலைவனாக அன்பு செய்! – Love like a Master
அந்த 40 வயது குடும்பத் தலைவி காலை எழுந்ததிலிருந்து பம்பரமாகச் சுழன்று குழந்தைகளுக்கும் கணவருக்கும் தேவையானவற்றைச் செய்தார்.

பிறகு அவர்களைப் பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டு, சிற்றுண்டி அருந்தக்கூட நேரமின்றி டிபன் பாக்சுடன் 9 மணிக்கு அலுவலகம் செல்லக் கிளம்பினார்.
அன்று பஸ்ஸில் ஒரே கூட்டம். அந்தப் பெண்ணுக்கு மிகவும் சோர்வாக இருந்தது. டிபன் பாக்சை எடுத்து, ஒரு வாய் சாம்பார் சாதம் உண்ணலாம் என டப்பாவைத் திறந்தார்.

ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போகும் சமயத்தில் ஓட்டுனர் போட்டார் சடன் பிரேக்.
கை தவறி டிபன் பாக்ஸ் கீழே விழுந்து சாம்பார் சாதம் சிதறிப்போய் அருகிலிருந்தோர் மீதெல்லாம் தெறித்துவிட்டது.
பாவம் அப்பெண், செய்வதறியாது திகைத்தார். பயணிகளோ அவரைத் திட்டித் தீர்த்தனர். கண்ணீர் ததும்ப அவமானத்தால் அவள் அப்படியே உறைந்து போய்விட்டார்.

love

அப்போது அங்கே ஒரு சுவாமிஜி தோன்றினான்.
அன்பை மறந்திருந்த அக்கூட்டத்தினிடையே அச்சிறுவன் தன் டிபன் பாக்சை எடுத்து அவளிடம் நீட்டி, ஒனக்கு மூணு இட்லி போதுமா? என்று கேட்டான்.
நம்ப முடியாத அந்தத் திடீர் அன்பைப் பெற்ற அந்தத் தாய் அழுதேவிட்டார்.

பஸ்ஸிலிருந்த கூட்டத்தினரும் தங்கள் தவற்றை உணர்ந்து அவனின் பெருந்தன்மைக்கும் அன்புக்கும் வியந்து அவனைக் கைதட்டிப் பாராட்டினர். சிலர் உடனே அந்த இடத்தைச் சுத்தம் செய்தனர்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் தலைமைப் பண்பை இச்சிறுவன் போல வெளிப்படுத்த முடியும். எங்கிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி நீங்கள் எஜமானனாக வேலை செய்ய முடியும். இது சுவாமி விவேகானந்தர் கூறும் தாரக மந்திரம்.

Author: Swami Vimurtananda

One response to “Love like a Master

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s