Serve Like a Master

தலைவனாகத் தொண்டாற்று! – Serve like a Master

உண்மையான தலைவன் லட்சியத்தை அடைய தன்னைத் தாழ்த்திக் கொள்ளவும் தயங்கமாட்டான்.

டாக்டர் ஜாகீர் ஹூசைன் நம் பாரத நாட்டின் மூன்றாவது ஜனாதிபதி. அவர் நிறுவிய பல்கலைக்கழகம் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம். அவர் அதன் துணைவேந்தராக இருந்தபோது, மாணவர்கள் புழுதி படிந்த ஷூக்களுடன் வகுப்புக்கு வரக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறி இருந்தார்.

zahir

ஆனால் சிலர் அந்த ஆணையைப் புறக்கணித்தனர். ஒரு நாள் ஜாகீர் ஹூசைன் கல்லூரி வாசலில் நின்று கொண்டார். உள்ளே நுழைந்த மாணவர்கள் தங்களுக்கு அன்று திட்டும் தண்டனையும் கிடைக்கப் போவது நிச்சயம் என எண்ணினார்கள்.
ஆனால் முதலில் உள்ளே வந்த மாணவனிடம் அவர், உன் காலணிகள் அழுக்கடைந்துள்ளன. கொஞ்சம் காலை நீட்டு. நான் அவற்றைத் துடைக்கிறேன் என்று பாலிஷும் பிரஷ்ஷுமாக நின்றார் ஜாகீர் ஹூசைன்.

இதைச் சிறிதும் எதிர்பாராத மாணவர்கள் அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்தனர். தங்கள் துணைவேந்தரின் எளிமையையும் அக்கறையையும் பார்த்த அவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
இனி தூசி படிந்த காலணிகளுடன் வகுப்புக்கு வர மாட்டோம் என்று சபதம் செய்தனர்.

Author: Swami Vimurtananda

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s