Three boons!!!


அம்மா தந்த மூன்று வரங்கள்

சென்னை, ஐ.ஐ.டி.யில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களின் தலையெழுத்தையே மாற்றிய பேரறிவாளர் அவர்! அத்தகையவர் என்னைக் காண வந்திருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

MDG : Disabled children race in Bhopal, India
அவரை வரவேற்று எனது இருக்கையில் அமர்த்தினேன்.அவர், நீங்கள் இளைஞர் என்றாலும் இனிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்” என்று என்னைப் புகழ்ந்தார்.

இது என் அம்மா எனக்கு அளித்த முதல் வரம் சார்” என்றேன். வியப்புடன் நோக்கிய அவருக்கு, எனது பத்தாவது வயதில் பள்ளியில் ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினேன்.

எல்லாப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்றிருந்தேன். தமிழில் மட்டும் குறைவு!
தமிழில் ஏன் குறைவு?” என்று அம்மா கேட்டார்.
அம்மா! மொழிப்பாடங்களால் எந்தப் பயனும் இல்லை. ஒன்றுக்கும் உதவாதப் பழங்கதைகளும் இலக்கணமும் எதற்கு?

எனது ஆசிரியர் சொன்னதுபோல கணிதத்தில் நான் ஒரு ராமாநுஜன் போல வரப் போகிறேன்” என்றேன்.
அம்மா புன்னகையுடன் சொன்னார்: மொழி வெறும் பேச்சுக் கருவியல்ல. அது உன் சிந்தனையின் கரு. மொழியில் தேர்ச்சி பெறாவிட்டால் சிந்தனையும் முழுமை பெறாது, வாழ்வும் சிறக்காது. மொழி, நமது பண்பாட்டின் சின்னம்.
உள்ளத்தின் உயர்வே உனது வாழ்வு. முட்டாளும் பேரறிஞரும் ஒருவர் போலவே தோன்றுவர். அவர்கள் வாயிலிருந்து வெளிப்படும் மொழியே அவர்கள் யாரென்று தீர்மானிக்கிறது. மகனே, மொழியும் வரலாறுமே ஒருவனின் வாழ்வுக்கும், வளமைக்கும் தேவையான ஆளுமையை அளிக்கும். எனவே அவற்றை ஆர்வத்துடன் கற்று வா”.
அதைக் கேட்டு வியந்த பேராசிரியர்,தம்பி! உன் தாய் உனக்களித்த பிற வரங்களையும் கூறு.” என்றார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தேன்.
அப்போது ஐ.ஐ.டி.யில் நான் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக முயன்ற நேரம்.
ஒரு நாள் அம்மாவிடம் சொன்னேன்:
அம்மா! ஸ்பெயின் நாட்டிற்கு என்னை அழைத்திருக்கிறார்கள். நம் நாட்டில் எனது திறமைக்கு மதிப்பில்லாதது மட்டுமல்ல, நாடே லஞ்சத்திலும் ஊழலிலும் ஊறிக் கிடக்கிறது. நேர்மையாக நடக்க வழி இல்லை” என நொந்து கொண்டேன்.
அம்மா அமைதியுடன், திடமான குரலில், நாடு எதுவும் செய்வதில்லை. அதில் வாழும் நாம்தான் எல்லாவற்றையும் செய்கிறோம். உன் கடமைகளைச் செய்வதற்கு முன்பாகவே, கருத்துச் சொல்வது எப்படிச் சரியாகும்?” என்று கேட்டு என்னை மடக்கினார்.
அம்மாவின் வார்த்தை என்னைச் சிந்திக்க வைத்தது.
தீவிர சிந்தனைக்குப் பின், அம்மா, நான் நம் நாட்டை விட்டு ஓடவில்லை. முதலில் ஒரு நல்ல குடிமகனாக என் கடமைகளைச் செய்கிறேன். ஆசி கூறுங்கள்” என்றேன்.
பிறகு பேராசிரியரிடம், அன்றைய தினத்திலிருந்தே என் வேலைகளை விழிப்புடன் செய்ய ஆரம்பித்தேன். பிறர் மீது பழி சுமத்தாமல், பொறுப்பை எனது தோள்களில் ஏற்றுக்கொண்டு கடமைகளைக் கருத்துடன் கவனித்து வருகிறேன்.
இதோ, இந்த ஐந்து வருடங்களில் இந்த நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்துள்ளேன். இது என் தாய் எனக்கு அளித்த இரண்டாவது வரம்.
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்தவுடன், அம்மா, இன்று நான் நான்கு பொய்கள் சொன்னேன். பகவான் என் கண்களைக் குத்தவில்லை. பிறகு ஏன் நான் உண்மையையே பேச வேண்டும்?” என்று கேட்டேன்.
அம்மா என்னிடம், பொய் சொன்னபோது மனதில் என்ன உணர்ந்தாய்?” என வினவினார்.
லேசாகப் பயம் இருந்தது. ஏமாற்றுகிறோம் என்று மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்றேன்.
அந்த மகிழ்ச்சி எவ்வளவு நேரம் இருந்தது?”
கொஞ்ச நேரம்தான் இருந்தது”.
பயம் எவ்வளவு நேரம் நீடித்தது?”
2 மணி நேரம்”
பார், நீ உண்மை பேசி இருந்தால் இவ்வளவு நேரம் உன் மனதில் பயம் நீடித்திருக்காதில்லையா? உண்மை பேசியிருந்தால் உன் மதிப்பும் உயர்ந்திருக்கும். இதைப் போகப் போக நீயே உணர்வாய்”.
அம்மா சொன்னதை நான் நடைமுறைப்படுத்திப் பார்க்கிறேன். அதனால் எனக்கு எந்தவித பயமுமில்லை. மிகுந்த தைரியம் என் மனதில் ஏற்படுகிறது.
‘தைரியமாக இரு. உண்மையை எதிர்கொள்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறியதே என் அன்னை எனக்கு அளித்த மூன்றாவது வரம்”.
நான் பெருமதிப்பு வைத்திருந்த எனது பேராசிரியரின் கண்களும் கசிவதைக் கண்டு நான் வியப்புற்றேன்.

One response to “Three boons!!!

  1. A mother who had her heart and mind in the right place. if today’s young mothers strive to be such good advisors, we are sure to reach great heights

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s