நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள்?

நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள்?

பல தேவதைகள் குழுமியிருக்கும் சொர்க்கத்திற்கு நான் சென்றேன். ஒரு தேவதை எனக்குச் சொர்க்கத்தைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு பகுதியைக் காட்டி, விண்ணப்பங்களைப் பெறும் பகுதி என்றாள்.
உலக மக்களின் பிரார்த்தனைகள் பல அங்கு வந்து குவிவதால் அவற்றைப் பிரிப்பதில் பல தேவதைகள் மும்முரமாக இருந்தனர்.
பின் பட்டுவாடா பிரிவிற்குச் சென்றோம். அங்கு இறைவனின் ஆசியை உலகிற்கு எடுத்துச் செல்லும் வேலையில் பல தேவதைகள் ஈடுபட்டிருந்தனர்.

heaven

பின், ஓரிடத்தில் ஒரு தேவதை வேலை இல்லாமல் இருந்தார்.
எனக்கு வழிகாட்டும் தேவதை, இது நன்றிகூறல் பகுதி என்றாள். ஆசி பெற்றவர்களுள் மிகச் சிலரே நன்றி கூறுகின்றனர் என்றாள்.
நன்றியை நவில்வது? என்று கேட்டேன். தேவதை, உனக்கு நன்றி என்றால் போதும் என்றாள்.
ஆசிகளுக்கு நாம் நன்றி கூற வேண்டும்? என்றேன் நான். அதற்கு அந்தத் தேவதை கூறினாள்:
1. உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.
2. வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின் முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன்.
3. உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.
4.நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ பாக்கியவான்.
5. போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.
6. கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.
7. உன் பெற்றோர் பிரியாமலும் உயிருடனும் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்துகொள்.
8. உன்னால் தலைநிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.
9. நீ இந்தச் செய்தியைப் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 200 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வி எனும் மாண்பினை நீ பெற்றுள்ளாய். மனிதனே, உனது ஆசிகளை நினைவு கூர்ந்து, மேலும் மேலும் முன்னேறு, சோர்வடையாதே.
தேவதை இவ்வாறு கூறி முடித்ததும் என் கனவு கலைந்தது.
தூக்கத்திலிருந்து மட்டுமல்ல; வாழ்விலும் விழிப்புணர்வு பெற்றேன்.

One response to “நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள்?

  1. Namasthe.very nice. Really grateful for all the glorious events of life and feel calm in the heart. Pranams

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s