டாடா ஜாக்ருதி யாத்ரா

டாடா ஜாக்ருதி யாத்ரா
அரும் பெரும் காரியங்களைச் சாதிக்கப் பிறந்தவள் சுவாமி விவேகானந்தர் கூறிய இந்தக் கட்டளைப்படி, நான் சாதிக்க வேண்டிய அருஞ்செயல், அதற்கான தூண்டுதல் எங்கே, எப்படிக் கிட்டும் என எனக்குப் புரியாமல் இருந்தது.
டாடாவின் ஜாக்ருதி யாத்திரைக்கு நான் விண்ணப்பித்தபோது இத்தனை பெரும் விஷயங்கள் வந்து சேரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
இந்த யாத்திரை நாடு முழுவதும் சுற்றுகின்ற ஒரு 18 நாள் ரயில் பயணம் மட்டும் என்று நினைத்தேன்.
அது அவ்வளவுதானா? இல்லை.
பல நல்லவர்களைச் சந்திக்கவும் அவர்களது வாழ்க்கை வரலாறுகளைக் கேட்கவும், நம் கதைகளை அவர்களுக்குச் சொல்வதற்குமான ஒரு பயணம் இது.
20,000 பேர் விண்ணப்பித்த இந்த யாத்திரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரில் நானும் ஒருத்தி.
என் பயணத்தின் ஒரு கதை இதோ!
tata_aug11_1 copy
புதுடெல்லி மாநகரில் ஓர் இளைஞர்; பத்திரிகையாளர்; பெயர் அன்சுகுப்தா. ஒரு நாள் அவர் தெருக்களில் விசித்திரமான பெயர்ப்பலகையுடன் ஒரு ரிக்ஷாவைப் பார்த்தார். அதில் காவல்துறைக்காகப் பிணங்களைச் சேகரிக்கும் வண்டி என எழுதப்பட்டிருந்தது.

குப்தா ரிக்ஷாக்காரரிடம் பேச்சு கொடுத்தார். டில்லியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அநாதைப் பிணங்களைச் சேகரித்துப் பிணவறைக்குக் கொண்டு செல்பவர் அவர் என்று புரிந்து கொண்டார்.
கோடையில் ஒரு நாளைக்குத் தெருவில் கேட்பாரற்றுக் கிடக்கும் 5 – 7 பிணங்கள் வரை சேகரிப்பார். குளிர்காலத்தில் தினமும் 15 பிணங்கள்கூடக் கிடைக்குமாம்.
ஒரு கொடுமையான – அருவருக்கத்தக்கப் பணி. சில நேரங்களில் என் 7 வயது மகளையும்கூட வைத்துக் கொண்டு நாள் முழுவதும் பணி செய்ய வேண்டியிருக்கும் என ரிக்ஷாக்காரர் கூறியபோது குப்தா நிலை குலைந்தார்.
சிறுமியுடன் பேசிய நேரம் என் உயிரையே உலுக்கிய கணம் என்றார் குப்தா.

அந்தச் சிறுமி, குளிராக இருக்கும் காலத்தில் நான் பிணங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கிவிடுவேன். அப்பிணங்களிடமுள்ள கொஞ்சநஞ்ச சூட்டையும் கவர இறுக்கமாகக் கட்டிப் பிடிப்பேன். அந்தப் பிணங்கள் புரண்டு படுக்காது; என் போர்வையைத் திருடாது; பதிலாக எனக்குக் கதகதப்பைத் தந்தன… என்றாள்.

பிணங்களுக்குப் பக்கத்திலேயே, நடுங்கிக் கொண்டும் நெளிந்து கொண்டும் இருந்த அவளை நினைத்துப் பார்த்தபோது குப்தாவால் தாங்க முடியவில்லை. பழைய ஸ்வெட்டர்களின் அருமை அப்போதுதான் புரிந்தது.

குப்தா என்ற அரசு சாரா அமைப்பை ஏற்படுத்தி, ஏழைகளுக்குக் கதகதப்பு தரும் கம்பளி ஆடைகளை அளித்தார். குப்தா முன் அமைதியற்ற நிலையில் அமர்ந்திருந்த நாங்களும் கூன்ஜின் கதை கேட்டுச் சிலைகளானோம்.
கதைகள் குழந்தைகளிடம் மட்டுமல்ல, இளைஞர்களிடமும் அதிக மாறுதல்களை உண்டாக்கும். கதைகளே மாவீரன் சிவாஜி போன்றவர்களை உருவாக்கின.

டாடாவின் ஜாக்ருதி யாத்திரையும் இதே வேலையைத்தான் செய்தது. இந்த நாட்டை உருவாக்கும் சிற்பிகளைச் செதுக்கி எடுக்கவே 400 துணிகரமான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எப்படிப்பட்ட இந்தியாவை நாம் படைக்க இருக்கிறோம்? அந்த இலக்கை அடைய இந்தப் படை என்ன செய்யப் போகிறது? என்பதற்கு இந்த 400 பேரும் பல கட்டுரைகள் எழுத வேண்டியிருந்தது.
20,000 பேரில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட 100 பெண்களுக்கும், 300 ஆண்களுக்கும் ஒரு நடுத்தர இந்தியனுக்கு எவ்வாறு உதவுவது என்ற உந்துதலைத் தந்தது தேர்வுக் குழுவினர்தான்!
யாத்திரையின் ஆரம்பத்தில் ஒப்பனையைத் தவிர பிற விஷயங்கள் பற்றி பெண்கள் பேசவில்லை; ஆண்கள் நம் எதிர்பார்ப்பிற்குக் கீழே இருந்தனர். ஆரம்பத்தில் ஏமாற்றமாகத் துவங்கிய இப்பயணம் நாட்கள் செல்லச் செல்ல நம்பிக்கை நல்க ஆரம்பித்தது.

400 பேரும் 400 வகைப்பட்ட திறமைசாலிகள். அவர்களுள் அமைதியான சமூக சேவகர்கள், விழிப்புணர்வுள்ள அரசியல்வாதிகள், அலுத்துப்போன மாணவர்கள், நம்பிக்கை இழந்த பல்துறை அலுவலர்கள் என அனைவரும் இருந்தனர்.
ஒவ்வொரு புதுமனிதரின் சந்திப்பும் எங்களுக்கு உற்சாகமூட்டியது. எல்லாச் சூழ்நிலைகளும் விரும்பத்தக்கச் சூழ்நிலைகளாக மாறின. இந்தப் பயணத்தைச் சிந்தனைகளைச் சிறகடிக்க வைக்கும் சொற்பொழிவுகளோடு மும்பையில் துவக்கினோம்.

அங்கிருந்து நாங்கள் முதலில் திருவனந்தபுரம் சென்றோம். இந்தியாவின் முதல் தொழில்நுட்பப் பூங்காவை நிறுவியவர் விஜயராகவன். ஒரு பைசாகூட லஞ்சமற்ற ஒரு பெரிய நிறுவனத்தை அவர் இங்கு உருவாக்கியுள்ளதைப் பார்த்து வியந்தோம்.
பிறகு குமரிமுனை! 120 ஆண்டுகளுக்கு முன் எதிர்கால இந்தியா பற்றிக் கனவு கண்ட சுவாமி விவேகானந்தர் பாரதத்தாயின் திருவடியில் அமர்ந்து தவம் செய்த இடம். அதே பாறையில் அவரை உதாரணபுருஷராகக் கொண்டு இந்தியாவின் மேல் அன்பு பூண்ட 400 பேரும் நின்றோம். அப்போது எங்கள் இதயத்தில் பொங்கிய உணர்ச்சிகள்தான் எத்தனை எத்தனை!

பிறகு, கனவு காண் என்ற அமைப்பை உருவாக்கிய விஷாலின் உரையாடல்களும், குழு விவாதங்களும் எங்களைக் கவர்ந்தன. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குழந்தைகளுக்குச் சீரிய கல்வியைத் தர அவர் துவக்கிய அமைப்பின் கதையைக் கூறியபோது எங்கள் நெஞ்சம் கனத்தது.
என் அபிமானத்துக்குரிய அடுத்த அமைப்பு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை. உலகிலேயே மிகப் பெரிய கண்சேவை மையம் இது! இங்கு வரும் நோயாளிகளில் 60 சதவீதத்தினருக்கும் மேல் இலவசமாகச் சிகிச்சை பெற்று வருபவர்கள்தான்!
எப்படி? எதற்கு? என்று கேள்வி கேட்டு மக்கள் சேவையைப் பற்றிய செய்திகளை டாக்டர் அரவிந்த் விளக்கினார்.
என்பது இரு படிகள் கொண்டது. இதயம் மட்டும் இரக்கப்பட்டால் போதாது. மனமும் சம அளவில் கருணைபொழிய வேண்டும் என்றார் அரவிந்த். இது எங்களுக்குப் பெரிய பாடம்.
பிறகு நாங்கள் கூத்தம்பாக்கம் கிராமத்துக்குச் சென்றோம். இது ஒரு முன்மாதிரி கிராமம்.
மத்திய அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பறைசாற்றும் கிராமம் இது.
அடுத்து, ஒரிசாவின் மென்மையான கிராம மக்களைச் சந்தித்த பின் வலிமையான ஜாம்ஷெட்பூர் டாடா இரும்பு ஆலைக்குச் சென்றோம்.
அதன்பின் உத்திரபிரதேசத்திலுள்ள டியோரியா மாவட்டத்திற்குச் சென்றோம். அங்கு நாங்கள் குழுக்களாகப் பிரிந்து கிராமத்திலுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணப் பல திட்டங்கள் வகுத்தோம்.
பிறகு ராஜஸ்தானில், சூரிய சக்தியால் இயங்கும் அறிவியல் அற்புதங்களைக் கண்டோம். முடிவாக குஜராத், ஓகாவிலுள்ள டாடா ரசாயன தொழிற்சாலையில் எங்கள் குழு விவாதங்கள் நடந்தன.
இப்படியாக…. 18 நாட்களும் பறந்தோடிவிட்டன. இந்த நாட்களில்தான் எங்களுக்குள் என்ன ஒரு மாற்றம்! நாங்கள் அனைவரும் வருங்கால இந்தியாவிற்காகத் திட்டமிடத் துவங்கிவிட்டோம்.

இந்தச் சில நாட்களில் நாங்கள் சந்தித்த சாதனையாளர்களின் தாக்கம் இனி எங்கள் செயல்களில் நிச்சயம் வெளிப்படும்.
400 இளைஞர்கள் சிங்க நடைபோட ஆரம்பித்துவிட்டோம். இனி நாங்கள் சிகரத்தில் ஏறுவது உறுதி. டாடாவின் ஜாக்ருதி யாத்திரை ஒரு பெரிய வெற்றிதான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s