எப்போதும் ஊக்கம் வேண்டுமா?

எப்போதும் ஊக்கம் வேண்டுமா?

வாழ்வில் நமக்குத் தேவையான ஊக்கத்தைப் பெறுவ
தற்குச் சிரமப்படுகிறோம். நாமாகப் பெறும் உந்துசக்தியை விட வெளியிலிருந்து வருவது வலுவாக உள்ளது.

motivation

நாம் பெற்ற ஊக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில யோசனைகள் இதோ:
* உந்துசக்தி உன்னிடமே உள்ளது. நீயேதான் அதைத் தட்டி எழுப்ப வேண்டும்; பிறர் உனக்குத் தருவது ஊக்கம் மட்டும்தான்.
* உலகுக்கு நீ ஏன் வந்துள்ளாய் என்று உணர்ந்தால் உன் வாழ்விற்கு ஓர் அர்த்தம் கிடைக்கும்.
* சரியாகத் தோற்றமளிப்பது ஒன்று; சரியாக இருப்பது மற்றொன்று. இவற்றில் பின்னதையே தேர்வு செய்.
* நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும், உனக்குள்ளே தனித்தன்மை கொண்ட பெரும் ஆற்றல் உள்ளது.
* கடும் உழைப்பு, ஒருவரது விருப்பமல்ல – அது ஒரு கட்டாயம்.
* நேர்மை – பேரம் பேசக்கூடியதோ, விவாதிக்கத் தக்கதோ அல்ல. நேர்மை மட்டும் இருந்துவிட்டால், யாவும் பின்தொடர்ந்து வரும்.
* எதை நினைக்கிறாயோ அதுவே உன் நடத்தை. எவ்வாறு நடந்துகொள்வாயோ, அதுவே உன் மரியாதை, மதிப்பு எல்லாம். அதனால் சிந்தனையைச் செம்மைப்படுத்து.
* உலகத்தின் விரிவான அமைப்பில் நீ ஒரு சிறு புள்ளி மட்டுமே. அதனால் அடக்கமாக இரு.
* ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய நுணுக்கத்தைக் கற்கவில்லை என்றால் வேலை செய்வதையே நிறுத்து.
* தெளிவான பங்கேற்பைவிட தெளிவான இலக்கே மிக அவசியம்.
* தரம் என்பது ஒரு பிரிவல்ல, அது ஒரு வாழ்வு முறை.
* கூற நினைத்தால் கூறிவிடு. ஊமைபோல் நடிக்காதே. மோசமாகத் தோற்றுப்போகும் நிலை எப்போதும் வரவே வராது.
* இன்றைக்கு நீ யாருக்காவது ஏதாவது உதவி செய்தாயா?
இல்லை என்றால் இன்று நீ வாழவே இல்லை. பல உயிரற்றப் பொருள்களுடன் நீயும் ஒன்றாக இருந்திருக்கிறாய்.
* மகிழ்ச்சியை நீ தேடு, பணம் உன் பின்னே வரும். பணத்தைத் தேடினால் உன் பின்னால் மகிழ்ச்சி வராது!
* உன்னைக் கோபித்தார்களா, வியாபாரத்தில் நஷ்டமா, உறவு ஏதும் முறிந்துவிட்டதா – இது உன் நல்ல நேரம் – அதற்கு நன்றி சொல். இது உனக்கு நடந்த நல்ல நிகழ்வு.
அடுத்த நிகழ்வைப் புதிதாகத் துவக்க ஒரு நல்ல வாய்ப்பு.
* என்ன நடக்க வேண்டும் என்று நீ நினைப்பது நடந்துவிட்டால் சந்தோஷம். நடக்க வேண்டும் என எண்ணியது நடக்கவில்லை எனில் இரட்டிப்பு மகிழ்ச்சி; கொண்டாடு.
* பிறரை நீ ஈர்ப்பதற்கு உண்மையே பேசு.
* கடவுள் உனக்கு வகுத்துள்ள திட்டத்தில் தவறு கிடையாது. பிரச்னையைச் சந்தித்தால், அதன் தீர்வில் ஒரு பங்காக இருக்க முயற்சி செய்.
* உன் தொலைநோக்கு, இலக்கு, செயல்பாடு ஆகியவற்றில் உறுதியாக இரு.
* வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை உரிய நேரத்தில் வாழ்நாளுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும். ஆறப் போடாதே.
* நீ நீயாக இருப்பதற்காக, உன் பெற்றோர், ஆசிரியர், வழிகாட்டி அனைவருக்கும் நன்றி கூறு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s