தளரும்போதெல்லாம்

தளரும்போதெல்லாம்
– எஸ்ஸெல்.வி.மூர்த்தி

தென் துருவத்தைக் கண்டுபிடித்த காப்டன் ஸ்காட், பனிச்சூறாவளியில் (blizzard) சிக்கி மரணமடைந்தார்.
பல்லாண்டுகளுக்குப் பின் குளிரால் விறைத்துவிட்ட அவரது உடலைக் கண்டெடுத்தார்கள். ஸ்காட்டின் கையில், அவரது நண்பர் புகழ்பெற்ற எழுத்தாளர் ஸர்.ஜேம்ஸ் பாரி (Sir James Barrie)க்கு எழுதிய கடிதம் ஒன்று இருந்தது.

அதில் ஸ்காட் கொடிய குளிரையும் அதனால் ஏற்படும் கஷ்டங்களையும் பற்றி எழுதியிருந்தார். இன்னல்களை மீறி, வாழ்வை எதிர்கொள்ளும் மகத்தான உணர்வு வேகம் அந்தக் கடிதத்திலே இருந்தது.

net

எங்கள் குழுவின் பாடல்களையும் மகிழ்ச்சியான உரையாடல்களையும் நீங்கள் கேட்க முடிந்தால்…. என்று குறிப்பிட்டு, அக்கடிதத்தின் கீழே பெரிய எழுத்துகளில் உறுதி (Courage) என எழுதியிருந்தார் ஸ்காட்.

கடிதத்தைப் படித்து நெகிழ்வும், உத்வேகமும் பெற்ற ஸர். ஜேம்ஸ் பாரி அந்தக் கடிதத்தைப் பத்திரமாக வைத்திருந்தார்.
சில நாட்களில், நோயுற்ற அவரது வலதுகை செயல் இழந்தது. எழுத்தாளரின் ஆயுதமே கைதானே? ஸ்காட்டின் கடிதத்தைப் படித்தார் ஜேம்ஸ் பாரி.
அவர், இன்னல்களை மலையாக எதிர்கொண்டபோதும், மரணம் காத்திருக்கும்போதும், மன உறுதியைப் பறைசாற்றியிருக்கிறார் ஸ்காட். என் நிலைமை எவ்வளவோ மேல். இடது கையால் எழுதும் மன உறுதியை நான் ஏன் பெற முடியாது…? என்று தனக்குள் கூறிக் கொண்டார்.

விரைவில் இடது கையால் எழுதும் திறமையை வளர்த்துக் கொண்டார் ஸர். ஜேம்ஸ் பாரி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s