வைரச் சுரங்கம் உன்னிடமே!

வைரச் சுரங்கம் உன்னிடமே!
கே.நிருபமா

19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்தவர் ரஸல் ஹெர்மன் கான்வெல். இவர் 1843 -ல் பிறந்து, 82 வருடங்கள் உயிர் வாழ்ந்தார்.
ரஸல் ஹெர்மன் கான்வெல் 15 ஆண்டுகள் வக்கீல் தொழில் செய்த பின் பாதிரி ஆனார். ஒரு நாள் ஓர் இளைஞன் அவரிடம் வந்து, தான் மேற்படிப்பு படிக்க விரும்புவதாகவும், அதற்கு வேண்டிய பண வசதி இல்லை என்றும் சொன்னான்.
அந்தக் கணமே கான்வெலுக்குத் தன் வாழ்க்கையின் லட்சியம் என்னவென்று தெரிந்தது. தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்காக ஒரு பல்கலைக் கழகம் நிறுவ முடிவு செய்தார் அவர்.

diamond1

அது மிகப் பெரியதொரு சவால்; அதற்குச் சில மில்லியன் டாலர்கள் தேவை என்பதும் அவருக்குத் தெரியும்.
எந்தத் தடங்கலும் வெல்ல முடியாததல்ல என்று அறிந்திருந்த அவருக்கு ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்ச்சி ஊக்கம் தந்தது.

ஒரு விவசாயி ஆப்பிரிக்காவின் வைரக்கற்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவற்றைத் தேடுவதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். தன் பண்ணை நிலங்களை எல்லாம் விற்று வைரம் கிடைக்கும் இடத்தைத் தேடிப் போனார்.
ஆப்பிரிக்கக் கண்டம் முழுதும் சுற்றித் திரிந்து வைரத்தைத் தேடிக் கொண்டே இருந்தார்! அவரது வயதும் ஏறிக்கொண்டே போயிற்று!
அவர் கையிருப்பு எல்லாம் கரைந்து போய் ஓட்டாண்டி ஆனார். முடிவில் நதியில் மூழ்கி இறந்தார்.

அதே சமயம் அவரது பண்ணையை வாங்கியவர் ஒரு முட்டையின் அளவில் இருந்த வித்தியாசமான ஒரு கல்லைக் கண்டெடுத்தார். அதைப் பார்வைக்காகத் தன் வீட்டில், மேஜையின் மேல் வைத்திருந்தார்.
ஒரு நாள் அவரைப் பார்க்க வந்த ஒருவர் அந்தக் கல்லைப் பார்த்து மூர்ச்சையடையாத குறைதான்! நான் கண்ட வைரங்களிலேயே மிகப் பெரிது என்றார்.

பண்ணையின் முதலாளி, அட, பண்ணை முழுவதும் இது போன்ற கற்கள் நிறையக் கிடக்கின்றன! என்று கூவினார்.
அந்தப் பண்ணையே உலகப் புகழ்பெற்ற கிம்பர்லி வைரப் பண்ணை. வைரத்தைத் தேடிப் போய்த் தற்கொலை செய்து கொண்டவர் வைரங்களுக்கு மத்தியிலேயே இருந்திருக்கிறார்!

பல்கலைக் கழகத்திற்கு நிதி திரட்டும் கூட்டங்களில் டாக்டர் கான்வெல் இந்த விவசாயியின் கதையை எடுத்துரைத்தார். நாம் எல்லோரும் நம்முடையதேயான வயல்களின் மத்தியில்தான் இருக்கிறோம்.
அக்கரைப் பச்சை என்று வேறு சூழ்நிலைகளைத் தேடி ஓடாமல் நாம் இருக்கும் இடத்தைப் பண்படுத்தி, பயன்படுத்தினால்!…. புவியில் வாழ்வாங்கு வாழலாமே! புதையல்களைக் கண்டெடுக்கலாமே!

கான்வெல் இக்கதையைப் பலமுறை சொன்னபோது, அதைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தனர்.
இதன் மூலமே கல்லூரி தொடங்குவதற்குத் தேவையான பணத்தைச் சேகரித்தார். 6 மில்லியன் டாலர்கள் கிடைத்தது!
அதைக் கொண்டு அவர் நிறுவிய பல்கலைக்கழகமான டெம்பிள் யூனிவர்சிடி அமெரிக்காவின் ஃபிலடெல்பியா மாகாணத்தில் உள்ளது. மிகவும் புகழ் வாய்ந்தது.

வாய்ப்புக்கள் என்றோ வருவன அல்ல; அவை முதலிலிருந்தே நம்மிடம் இருக்கின்றன.
குனிந்து பாருங்கள் உங்கள் காலடியை! உங்களுக்கு அங்கு வைரக்கற்கள் தென்படாவிட்டாலும், ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி உங்களை இட்டுச்செல்லும் இரண்டு உறுதியான கால்களை நீங்கள் கட்டாயம் காண்பீர்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s