ஒருமுறை கை குலுக்கியிருந்தால் பத்து வருடம்…?

ஒருமுறை கை குலுக்கியிருந்தால் பத்து வருடம்…?

– ஆன் லூயிஸ் பார்டாச்

இந்தக் கட்டுரையின் ஆசிரியர் Newsweek பத்திரிகையின் புகழ்மிக்க எழுத்தாளர் Ann Louise Bardach. சுவாமி விவேகானந்தரின் வரலாற்றை ஆராய்ந்து வருகிறார்.
மேற்கிற்கு வந்த முதல் கிழக்கத்திய சமயத் தூதரான விவேகானந்தரின் பெருமை இன்று நமது மேற்கத்திய நாடுகளிலெல்லாம் பரவியுள்ளது.

இந்தியத் துறவியான சுவாமி விவேகானந்தர் மும்பையிலிருந்து இரண்டு மாதக் கப்பல் பயணத்திற்குப் பிறகு 1893-ஆம் வருடம் சிகாகோவில் பாதம் பதித்தார்.
மகாசபை நிகழ்ந்த மாதத்திலேயே 4000-க்கும் மேற்பட்ட மக்களிடம் அத்துறவி தமது ஆன்மிக உரைகளை நிகழ்த்தினார். அமெரிக்கர்களுக்கு ஏற்றாற்போல் வேதாந்தக் கருத்துகளை மிகவும் எளிய முறையில் விவரித்த அவர் ஆன்மாக்களும் புனிதத்
துவம் நிறைந்தவை, பணியின் மூலம் வழிபாடு ஆகிய கருத்து
களால் அனைவரையும் ஈர்த்தார்.

செப்டம்பர் 27-ல் சர்வமத சபையில் தமது இறுதி உரையை நிகழ்த்தியபோது சுவாமி விவேகானந்தர் ஓர் ஒளிமிக்கத் தாரகையாகவே மிளிர்ந்தார். தமது செய்தியைப் பரப்புவதற்காக அமெரிக்க வீதிகளில் அவர் உலவியபோது எழுச்சி மிக்க அமெரிக்கர்கள் அவரைப் போற்றினார்கள்.

தமது சமகாலத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் பலரை அவர் வியக்க வைத்தார். எப்படி உருவாகிறோம் என்பதைவிட என்ன செய்கிறோம் என்பதைப் பெரிதும் விரும்பும் அமெரிக்கர்களிடம் இந்த இளந்துறவி, உடலும் அல்ல, மனமும் அல்ல என்று கூறி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இறைவனை உணர்வதுதான் யோகம் என்று கூறிய விவேகானந்தர் போலிச் செயல்களைச் சாடினார்.

மேலும் அவர், கிழக்கு நாடுகளுக்கு அளித்த செய்திபோல, மேலை நாடுகளுக்கு நான் ஒரு செய்தியுடன் வந்துள்ளேன் என உரைத்தார்.
லியோ டால்ஸ்டாய், விவேகானந்தரை எவ்வித சந்தேகமுமின்றி முழுமையாக ஏற்றுக் கொண்டார். இவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய நூல்களில் அதிக ஆர்வம் காட்டியவர்.

டால்ஸ்டாய் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன், 6 மணியிலிருந்து நான் விவேகானந்தர் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று எழுதினார். பின்னர் இளம் வயதில் சுயநலமற்ற ஆன்மிக தியானத்தில் ஒருவர் ஈடுபட முடியுமா? என்று வியந்து புகழாரம் சூட்டினார் அவர்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தத்துவ அறிஞர் மற்றும் உளவியல் நிபுணரான வில்லியம் ஜேம்ஸ், விவேகானந்தரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். அவர் தமது நூலில் The Varieties of Religious Experience இந்த இளந்துறவியின் கருத்துகளை அதிக அளவு மேற்கோள் காட்டியுள்ளார். விவேகானந்தரும் ஜேம்ஸை மிகச் சிறந்த மனிதர் மனிதகுலத்தின் சிறப்பு எனப் பாராட்டியுள்ளார்.

1896-ஆம் ஆண்டு விவேகானந்தர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய உரையைக் கேட்டு ஜேம்ஸின் மாணவரான Gertrude Stein என்பவரும் மற்றும் பல பல்கலைக் கழகப் பேராசிரியர்களும் இந்த இளந்துறவிக்குக் கிழக்கிந்திய தத்துவத்துறையின் பேராசிரியர் பொறுப்பை வழங்க முன்வந்தனர். ஆனால் சுவாமிஜி தமது துறவு வாழ்க்கையின் காரணத்தால் அதனை ஏற்க மறுத்தார்.
Aldous Huxley, அவரது நண்பர் Christopher Isherwood ஆகியோரும் இத்துறவியின் கருத்துகளில் மனதைப் பறிகொடுத்தனர்.

Henry Miller என்ற நாவலாசிரியர், 1945-இல் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் விவேகானந்தரின் நூல்களை ஓர் உன்னதமான கண்டுபிடிப்பு என்று புகழ்ந்துள்ளார்.
மேலும் அவர் 1962-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் கீழ்வருமாறு கூறினார்: விவேகானந்தர் எனது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு முக்கிய மனிதர்.

ஆன்மிக சாதகரும் எழுத்தாளருமான J.D.Salinger, இந்த நூற்றாண்டில் தான் அறிந்த மேதைகளுள் விவேகானந்தரே போற்றுதலுக்குரிய ஓர் அற்புதமான, நல்லன யாவும் அமையப் பெற்ற மாமனிதர் என்று வியந்தார்.

அதோடு ஒரு முறை அவருடன் கைகுலுக்கியிருந்தால் என்னுடைய வாழ்நாளில் 10 வருடத்தையாவது இந்த இளந்துறவிக்குக் கொடுத்திருப்பேனே என உருக்கத்தோடு கூறினார்.

அமெரிக்கர்களிடம் விவேகானந்தர் கொண்ட அன்பு மற்றும் அக்கறை எல்லையில்லாதது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s