ஆச்சாரியர் எப்படிப்பட்டவர்?

ஆச்சாரியர் எப்படிப்பட்டவர்?

1. குரு தன் சீடனிடமிருந்து முழு நம்பிக்கையையும், அடக்கத்தையும் எதிர்பார்க்கிறார்.
2. உள்நோக்கிய பயணத்துக்காக உன் வெளிப்பூச்சுகளைக் களைகிறார்.
3. நீ செல்ல வேண்டிய பாதையைக் காட்டும் கைகாட்டி.
4. விடுதலைக்கான மார்க்கத்தில் உன்னை முனைப்புடன் செலுத்துபவர்.
5. உன்னைப் பற்றியும் உன் உண்மை இயல்பு பற்றியும் உணர வைக்கிறார்.

Sri-Ramakrishna

6. உன் வளர்ச்சிக்கு உன்னையே பொறுப்பாளியாக்குகிறார்.
7. உனக்குத் தேவையான, உன்னிடம் இல்லாதவற்றை உனக்கு அளிக்கிறார்.
8. உன் விடைகளையே கேள்வி கேட்கிறார்.
9. ஆசாரியரோ, இந்த உலகோடு உனக்குள்ள உறவில் நீ நிற்பது எங்கே என்று புரிய வைக்கிறார்.
10. உன் அறிவை ஒன்றுமில்லாததாக்கி உன் அகங்காரத்தை ஒடுக்கிவிடுகிறார்.
11. உன்னையே உருவாக்குகிறார் குரு.
12. உன் மனதைத் திறந்து அது மலர உதவுகிறார் ஆசாரியர்.
13. அருட்செல்வத்தை அடைய வழிகாட்டுகிறார் ஆசாரியர்.
14. உன் ஆன்மாவையே தொட்டுவிடுவார்.
15. உன்னை ஞானி ஆக்குகிறார்.
16. கள்ளம் கபடமற்றத் தன்மைக்கு உன்னைத் திரும்ப வைக்கிறார் .
17. பிரச்னைகளின் ஆதாரத்தையே தீர்க்கும் வழியைக் கற்றுத் தருகிறார்.
18. மாற்றி யோசிக்க வைப்பவர் .
19. அன்பாலே அடித்தாவது உன்னைத் திருத்துவார்.
20. சீடனுக்குத் தாய் போன்றவர்.
21. உன்னைத் தேடிப் பிடித்துத் தன்னோடு சேர்த்துக் கொள்கிறார்.
22. ஒரு முன்மாதிரியாக நடந்து வழிகாட்டுகிறார் குரு.
23.தமது கடமையை முடித்ததும் நீ இவரைக் கொண்டாடுகிறாய்.
24. உபதேசம் முடிந்ததும் நீ உன் குருவுக்குக் கடமைப்பட்டவனாகிவிடுகிறாய்.
ஆதலால் குருவை வணங்கு. தன்னை அறிந்து புனிதனாகு. அவர் உனக்கு உணர்வளிப்பார்!

One response to “ஆச்சாரியர் எப்படிப்பட்டவர்?

  1. Guru Brahma, Guru Vishnu, Guru Devo Maheshwara, Guru sakshath ParaBrahmam, tasmai sri Gurave Namaha:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s