How to create a temple?

ஆலயத்தை அகத்தில் அமைப்பது!
புறத்தில் மட்டும் பெரும் பக்தனாக மலர்ந்தால் போதுமா? அகத்தில் ஆன்ம தீபம் ஏற்ற வேண்டாமா? மனிதனின் புற வளர்ச்சியான சமுதாய வளர்ச்சி முக்கியம்தான்; அதனை நிர்ணயிக்கும் அக வளர்ச்சி அதிமுக்கியம்.
அதைக் காட்டுவது பூசலார் நாயனாரின் வாழ்க்கை. அந்த நாட்டு மன்னர் ஈசனுக்காகப் பெரும் செலவில் ஒரு கோவில் கட்டிக் கொண்டிருந்தார். பூசலாரோ, தமது இதயக் கமலத்தில் ஒரு கோவிலை பாவனையால் கட்டி முடித்தார்.
கும்பாபிஷேகத்திற்கான நேரம் வந்தது. ஈசன் அகக் கோவிலுக்குத்தான் முதலில் சென்றார்.

temple


ஆலயமாகவே அமைவது!

அகத்தில் ஆலயத்தை உருவாக்கியவர்கள், பக்தர்களின் இதயங்களில் பகவானின் கோவிலுக்கான அடிக்கல்லை நடுவதிலிருந்து கொடிக்கம்பம் எழுப்புவதுவரை அமைத்துத் தருவார்கள்.
பூசலாரைப் போன்று அகத்தில் ஆலயத்தை எழுப்பியவர்கள் அவர்களது ஸ்தூல சரீரம் மறைந்த பிறகும்-தொடர்ந்து பக்தர்களின் நெஞ்சங்களில் ஆலயத்தை ஏற்றி வைக்கிறார்கள். இது ஆலயமேகி, ஆலயமான அருளாளர்களின் வரலாறு.
ஆனால்…,

சாதாரண நம் போன்ற பக்தர்களின் விஷயம் வேறு என்று ஒதுங்கிவிடக் கூடாது. சாதாரண பக்தர்களும் அவரவர் நிலைக்கும் பக்குவத்திற்கும் தக்கபடி, ஆலயமேகி, ஆலயமாக வேண்டும்.

ஆலயமாகுதல் என்றால் ஸ்தூல நிலையில் அல்ல.

ஓர் ஆலயம் என்னவெல்லாம் வழங்குகிறதோ, அவற்றையெல்லாம் ஆலயத்திற்குச் சென்று வரும் அருள் பெற்றவர்களும் பெற்றிருப்பது அவசியம்.

ஆலயம் அமைதியைத் தரும்; அருள் பெற உதவும்; இறையன்பை ஊட்டும்; தொல்லைகளில் சிக்கியுள்ளவர்களுக்குச் சிறிது நேரமாவது நிம்மதியை நல்கும்;
தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு பிரசாதத்தை – குறைந்தது குங்குமத்தையாவது தரும்; அது அவர்களுக்கு மங்களத்தைச் சேர்க்குமே!

ஆலயமாகவே திகழ்ந்த நமது காலத்து ஓர் அற்புத மகான் ஸ்ரீமத் சுவாமி ரங்கநாதானந்தர் ஒவ்வொரு பக்தரிடம் கேட்கும் கேள்விகளும் ஆன்மிகத்திற்கான அவர் தரும் விளக்கங்களும் இவை:
ஆன்மிகத்தில் முன்னேறுகிறீர்களா?
பிறரை நேசிக்க முடியுமா?
நீங்களும் ஒன்று என உணர முடிகிறதா?
மனதில் அமைதி குடிகொண்டுள்ளதா? அது உங்களைச் சுற்றிலும் பரவி வருகிறதா?

இறைதியானத்தின் மூலம் மற்றும் சேவை மனப்பான்மையுடன் புறத்தில் செய்யப்படும் பணிகளாலும் தூண்டப்படுவதே ஆன்மிக உணர்வு ஆகும்.
மொத்தத்தில் அன்றாடம் கோவிலுக்குப் போய் வரும் நாமும் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்:
ஆலயமேகினால் ஆலயமாகும் வரை நம் அகப் பரிணாம வளர்ச்சி தொடர வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s