சாதனையின் அஸ்திவாரங்கள் – Part 1

சாதனையின் அஸ்திவாரங்கள்
– சுவாமி அபிராமானந்தர்

temple_basement

நான்கு பேர் காட்டில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுள் மூவருக்குத் தனித்திறமைகளும் அவற்றில் கர்வமும் இருந்தன.

முதலாமவனுக்கு ஓர் எலும்புக்கூட்டைக் கண்டால் அது எந்த மிருகத்தினுடையது என்று உடனே கண்டுபிடிக்கத் தெரியும்.
அடுத்தவனுக்கு எலும்புக்கூட்டிற்குச் சதையும் உருவமும் தரத் தெரியும். மூன்றாமவனுக்கு அந்த உருவத்திற்கு உயிர் கொடுக்க முடியும். நான்காமவனோ விவேகமுள்ளவன்.

காட்டில் முதலாமவன் ஓர் எலும்புக்கூட்டைக் கண்டு இது ஒரு சிங்கத்தினுடையது என்றான். அடுத்தவன் அதற்கு உருவம் அளித்தான். மூன்றாமவன் அதற்கு உயிரூட்டச் சென்றான்.
இதைக் கவனித்த நான்காமவன் அவர்களை இவ்வாறு செய்ய வேண்டாமென்று எச்சரித்தான். அதைப் பொருட்படுத்தாது மூன்றாமவன் அந்த உருவத்திற்கு உயிர் தந்தான். அதற்குள் நான்காமவன் ஒரு மரத்தில் ஏறிவிட்டான்.
உயிர் பெற்று எழுந்த சிங்கம் மூவரையும் கொன்றுவிட்டது.

இக்கதையில் எலும்புக்கூட்டை அடையாளம் காட்டுபவன் அறிவியலின் பிரதிநிதி எனலாம்.
உருவம் தந்தவன் தொழில்நுட்பத்தின் பிரதிநிதி.
உயிர் தந்தவன் நுகர்வு கலாச்சாரத்தின் பிரதிநிதி.
நான்காமவன் சமுதாய நலவாதி.

முதல் மூவரும் வெறும் அறிவு மட்டும் பெற்றவர்கள். நான்காமவன் ஞானம் பெற்றவன். அறிவு, ஞானத்தில் முழுமை அடைந்தால் மட்டுமே கல்வி சமுதாய நலனுக்குத் தூண்டுகோலாகும். அது அறிவாகவே நின்றுவிட்டால், அதுவே நம்மை அழிவை நோக்கி அழைத்துச் செல்லும்.

மேற்கண்ட நான்கையும் அறிவியல், தொழில்நுட்பம், நுகர்வு கலாச்சாரம் மற்றும் சமுதாய நலன் என்பதற்குப் பதில் புள்ளி விவரங்கள் (Data), தகவல் (Information), அறிவு (Knowledge) மற்றும் ஞானம் (Wisdom) என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

KNOWLEDGE ஆனது WISDOM ஆக மாற வேண்டுமென்றால் அந்த இடத்தில் நீதி நெறிகள் (Values) தேவை. இது இல்லாவிடில் அறிவு அறிவாகவே நின்றுவிடும். இன்றைக்கு அறிவு நிறைய உள்ளது. ஆனால் அதனை நாம் ஞானமாக மாற்ற முடியவில்லை.

ஞானத்திற்கும் அறிவிற்கும் என்ன வித்தியாசம்?
அறிவியல் ஓர் அக்னி. அதை வைத்துச் சமைத்து எல்லோருக்கும் உணவிடவும் முடியும். அல்லது வீட்டை எரிக்கவும் முடியும்.

Contd…. in next post…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s