Bravest Battle

மாவீரன் பகத்சிங் நமது நாட்டு விடுதலைக்காகத் துணிவான செயல்களைச் செய்தவர்; தம் உயிரை விடுதலை வேள்வியில் ஆஹுதி ஆக்கியவர்.

bhagatsingh

ஆங்கில ஏகாதிபத்தியம் அவரைச் சிறைப்பிடித்து தூக்குத் தண்டனையும் விதித்தது.
தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாள் மார்ச் 23, 1931 என்று நிர்ணயிக்கப்பட்டது.

மார்ச் 3-இல் பகத்சிங்கின் தாய் அவரைக் காண சிறைக்குச் சென்றார்.
எதற்கும் அஞ்சாத அந்தச் சிங்கம், தன் முடிவு கேட்டுத் தாய் கலங்குவாரே என எண்ணி அஞ்சியது.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலிருந்தபடி, ‘அம்மா, என் முடிவு கேட்டு நிலைகுலைந்து போவாளோ?’ என்ற அச்சத்துடன் உற்று நோக்கினார் பகத்சிங்.

ஆனால், தாய் தன் மகனை ஒளி வீசும் கண்களால் நேராகக் கண்டார். வீரத்தாய் வீரமகனின் செயல்களை எண்ணிப் பூரிப்படைந்தார்.

“மகனே, பிறந்தவர் இறப்பது உறுதி. ஆனால் இறந்த பின்னும் உலகம் வெகுசிலரையே நினைவில் கொள்ளும். அத்தகைய பெருமை பெற்றவர்களுள் நீயும் ஒருவன். தூக்குமேடைக்குச் செல்லும்போது நீ ஆனந்தமாகச் செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.
இறவாப் புகழ் பெற்று அமரத்துவம் அடையச் செல்பவர் ஆனந்தமாக அல்லவா செல்வர்!” என்றார்.

bhagat singh_mother

இந்த வார்த்தைகள் பகத்சிங்கிடம் எத்தகைய உணர்ச்சிகளை உண்டாக்கியிருக்கும்!
ஆம், தூக்குமேடை முன் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழங்கினார். சூழ்ந்திருந்தவர்களும் உணர்ச்சி வசப்பட்டு முழக்கம் செய்தனர்.

ஆனந்தமாகத் தூக்குக்கயிற்றை முத்தமிட்டு அதை ஏற்றார் பகத்சிங்.

Bravest Battle என்ற கவிதையின் சில வரிகள்:
The bravest battle that was ever fought, shall I tell you where and when? On the maps of the world you’ll find not.

It was fought by Mothers of Men.

‘உலகிலேயே மிகத் துணிவுமிக்கப் போர் எங்கு எப்போது என்று கூறட்டுமா? உலக வரைபடத்தில் எங்கும் காண முடியாது.

அது வீரர்களைப் பெற்ற தாய்மார்களின் நெஞ்சில் நடைபெற்றது’.

மாவீரன் பகத்சிங் விஷயத்தில் இது அப்படியே பொருந்தும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s