அம்மாதான் இப்படி வேண்டுவாள்!

அம்மாதான் இப்படி வேண்டுவாள்!

அது ஒரு விநோதமான மாயக்கண்ணாடி.

அந்தப் பெரியவருக்கு அது ஒரு பொக்கிஷம்.

அதில் அப்படி என்ன விசேஷம்?

அக்கண்ணாடியை எந்தப் பக்கத்தில் திருப்பினாலும் அத்திசையில் நிகழும் காட்சியை அவருக்குக் காட்டிவிடும். ஏதோ திரையில் காட்டப்பட்ட காட்சி போலல்லவா அவரால் காண முடிகிறது!

கண்ணாடியை வறண்ட பாலைவனம் உள்ள திசைக்குத் திருப்பினார் பெரியவர். அங்கே ஒரு முதியவர் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தார். அவர் வேண்டியதோ வறட்சியின் கொடுமையைப் போக்கும் மழையை.

கடவுளே! எங்களுக்கு மழையை அளியுங்கள். வறட்சியில் வாடி வதங்குகிறோம். கருணை கொள்ளுங்கள்” என்று பிரார்த்தித்தார்.

மற்றொரு திசையில் கண்டதோ ஒரு விவசாயியின் விளைநிலம். அங்கே அவன் நிலத்தில் இருந்த கடலைப் பயிரைப் பார்த்தபடி, சாமி! நல்ல விளைச்சலைத் தா, விளையும் கடலைக்கு மிக அதிக கொள் விலையைத் தா” என விண்ணை நோக்கி இறைவனிடம் யாசித்தான்.

மூன்றாவது திசையை நோக்கிக் கண்ணாடியைப் பெரியவர் திரும்பினார். அங்கே அவர் கண்டது ஒரு கொள்ளைக்காரனின் பயங்கரத் தோற்றம்.
எல்லோரும் சொத்து சேர்த்து மகிழ்கிறார்கள். இறைவா! நீ எனக்கு என்ன தந்தாய்? ஒன்று செய்! சீமான்களின் மாளிகையிலுள்ள பொருள்களை நான் கொள்ளையடிக்கப் போகிறேன். நான் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் விலையுயர்ந்த பொருள்கள் எனக்குக் கிடைக்குமாறு வழி செய்” என்று அவன் பிரார்த்தித்தான்.

என்ன, எல்லாப் பிரார்த்தனைகளும் விண்ணை நோக்கிச் செய்யப்படுகின்றனவே! பிரார்த்தனை எதுவானாலும் இறைவனைச் சென்று அடையுமோ!

அட! இந்தத் தாய் யாரைத் தேடிச் செல்கிறாள்? மற்ற பையன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனைத்தான் தேடி விரைகிறாளோ!
ஏ! அப்துல்! எங்கே போய்விட்டாய்! பிரார்த்தனை நேரம் வந்துவிட்டது? அதை மறந்துவிட்டு என்ன விளையாட்டு? வா சீக்கிரம்! பிறகு விளையாடலாம்” என்று மகனை அழைக்கிறாள்.

பெரியவருக்குப் பரபரப்பு. தாயுள்ளம் இறைவனிடம் எதை வேண்டப் போகிறது? வேறு என்ன? தன் குழந்தையின் நலனைத்தான் என்று எண்ணியபடியே கண்ணாடியை உற்று நோக்கினார்.

முரண்டு பண்ணிக்கொண்டு வேண்டா வெறுப்பாக, விளையாட்டில் லயித்திருந்த சிறுவனோ, அம்மாவின் அரவணைப்பில் சிறிது நேரம் கட்டுப்பட்டான்.

அன்னை, தன் மகனைத் தன் அருகில் அமர்த்தி, அவனது கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து இந்தப் பிரார்த்தனையைக் கூறினாள்:

ஹே! பிரபோ! நீ கருணாமூர்த்தி! உன்னால்தான் எங்களுக்கு உண்பதற்கு அரிசியும், சுவையான பழங்
களும் கிடைக்கின்றன. எங்களை மகிழ்விக்க நறுமண மலர்களையும் அல்லவா அளித்துள்ளாய். பறவைகள்தான் என்ன அருமையாக இசை பாடுகின்றன! இறைவா! இதுவே எங்களுக்குப் போதும்.”
இந்தப் பிரார்த்தனையை தாய் சொல்லச் சொல்ல மீண்டும் திரும்பக் கூறினான் குழந்தை.

அவ்வளவுதான்! பிரார்த்தனை முடிந்துவிட்டது! திரும்பித் தாயின் முகம் பார்த்தான் சிறுவன் பரிதாபமாக.

அம்மா! இதற்கா என்னை அழைத்தாய்? ஒரு பயனுமில்லாத பிரார்த்தனை” என்று கூறிவிட்டு விளையாடுவதற்கு விரைந்து ஓடினான்.

அப்போது அன்னையும் மகனும் அமர்ந்து பிரார்த்தித்த இடத்திலிருந்து ஒரு புறா விண்ணை நோக்கிச் சென்றது. அது இறைவனிடம் சென்று சிறுவனின் பிரார்த்தனையை ஒப்பித்ததோ!

white dove flying

ஆஹா! இது என்ன! எங்கும் மகிழ்ச்சியும் குதூகலமும். இறைவன் கண் திறந்து பார்த்துவிட்டாரா?

புத்தொளி ஒன்று இந்த நானிலம் முழுவதும் வந்து இறங்கியுள்ளதே!
வெறும் காற்றுக்கே விலைபேசும் இந்த உலகில் எப்படி எதைப் பிரார்த்திப்பது என்று சொல்லித் தர
இது போன்ற ஓர் அன்னையால்தான் முடியும்!

கேளாமல் வழங்கும் கருணையாளன் இறைவன் என்பதை உணர்த்திய அன்னையே உனக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள். *

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s