Think Big – Part 1

எண்ணித் துணிக
– சுவாமி பரமசுகானந்தர்

ஒன்றைச் செய்யும் முன் சிந்தித்துச் செய்ய வேண்டும். செயலைத் துவங்கிய பிறகு அதன் விளைவுகளைக் கண்டு வருந்தக் கூடாது என்று திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

நாம் ஒன்றைச் சாதிப்பதற்குச் சிந்தனை, செயல் ஆகிய இரண்டும் தேவை. சிந்திக்கட்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். அப்படி என்றால் மனிதர்கள் சிந்தனை செய்வதில்லை என அர்த்தமா?

எண்ணுக!

மனிதனுக்கே சிந்திக்கும் ஆற்றல் உண்டு. இது சிந்தனா சக்தி எனப்படும். இந்தச் சக்தியைப் பயன்படுத்தாவிட்டால், சிந்திக்காவிட்டால், மனித வாழ்வு மிருகங்களைப் போல உண்டு, தூங்கி, இனவிருத்தி செய்வதிலேயே முடிந்துவிடும். அவற்றுக்கும் நமக்குமுள்ள வித்தியாசம் சிந்தனை சக்தி மட்டுமே.

இன்றுள்ள சில இளைஞர்களின் நடையுடை பாவனைகள் பிரபலங்கள் சிலரின் பிரதிபலிப்புகளாகவே உள்ளன. இது காப்பியடித்தல் – Imitation.

யாரோ செய்ததைத் தானும் அப்படியே பின்பற்றுவது ஒரு சிந்தனையற்ற செயல். சுவாமிஜி, நீங்கள் காப்பியடிக்காதீர்கள் என்கிறார்.
ஒருவர் ஒரு சினிமா நடிகரைப் போல நடந்து கொண்டால் நீங்கள் அவனிடம், அந்த நடிகரைப் போலவே இருக்கிறாய் என்று கூறுவீர்களே தவிர, அவர் என்று கூற மாட்டீர்கள்.

அந்த நடிகரே பார்த்தால்கூட அவர், நீ என்னைப் போலவே இருக்கிறாயே! என்று தான் கூறுவாரே தவிர, நான் என்று கூற மாட்டார்.
நாம் 100% காப்பியடித்தாலும் நம் நண்பர்களும், சமுதாயமும் அதை ஏற்க மாட்டார்கள். பின் எதற்காக நாம் காப்பியடிக்க வேண்டும்? அப்படியே நாம் செய்தாலும் நம் உள்மனது அந்த உண்மையான நிலைக்கு உயராதவரை, நாம் வெளியிலே செய்கின்ற அனைத்தும் வெறும் கேலிக்கூத்தாகிவிடும்.

நன்கு சிந்திப்பதற்கு நான்கு கருத்துகள் தேவை.

1. பெரியவற்றைச் சிந்தியுங்கள்-Think Big: இளைஞர்களிடம், என்னவாகப் போகிறாய்? என்று கேட்டால், ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ படித்து – பின் சம்பாதித்து – திருமணம் – பிள்ளைகள் – வீடு என்று இப்படி வாழ்ந்தாலே போதும் என்பார்கள்.

ஆனால் சான்றோர்கள், தங்களது தேவைகளுக்குக் கஷ்டப்பட்டாலும் பெரிய விஷயங்களைப் பற்றியே சிந்தித்துச் செயல்பட்டார்கள்.
big
சுவாமி விவேகானந்தர் அடுத்த வேளைக்கு உணவு இல்லாத நிலையிலும் நாடு முழுவதும் பரிவ்ராஜகராகச் சுற்றி வந்தபோதும், அவர் மனம் இந்தியாவை எப்படி எழுச்சி பெறச் செய்வது என்பதிலேயே நிலைகொண்டிருந்தது.

பாரதியார் வறுமையில் இருந்த காலத்தில்தான், மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினார்.

சுவாமி விவேகானந்தர், எதை நினைக்கின்றாயோ, அதுவாகவே ஆகின்றாய் என்று கூறியுள்ளார். எனவே எதை சிந்தனைச் செய்கின்றோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

Contd …………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s