Young Scientist – Eye blink Infra red Sensor

சுவாமி கௌதமானந்தரிடம் வாழ்த்து பெற்ற இளம் விஞ்ஞானி

ஊட்டி R K புரத்தில் நகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கோகுல் மாநில அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் கண்காட்சியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளான். 1000 மாணவர்கள் பங்கேற்ற போட்டியில் ‘கண் சிமிட்டி உணர்வு கருவி’ யை கண்டுபிடித்த கோகுல் Inspire Award-ஐ வென்றான். அனைத்து தினசரிகளும் அன்றைய தேதியில் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி செய்தி வெளியிட்டுருந்தது.

தனது நெருங்கிய உறவினரை சாலை விபத்தில் இழந்த துக்கமே, ‘இனி இத்தகைய விபத்துக்களை தவிர்க்க என்ன செய்யலாம்?’ என்று கோகுலை யோசிக்க செய்துள்ளது.
சிறுவன் கிட்டத்தட்ட ஓராண்டு முயன்று இந்த புதிய ‘Eye blink Infra red Sensor’ கருவியை கண்டுபிடித்துள்ளான்.

இந்த கருவியில் ஒரு PIC Micro Controller கருவி ஓட்டுநரின் இருக்கைக்கு அடியில் பொருத்தப் பட்டிருக்கும். Infra-red sensor, கண் இமைகள் சிமிட்டுவதை உணர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர், ஒரு சில, வினாடிகள் தொடர்ந்து இமைக்காமல் தூங்க நேர்ந்தால், உடனே இந்த கருவி இயங்கி ஓட்டுநரின் இருக்கைக்கு அடியில் ஒரு அதிர்வை உண்டாக்கி, உலுக்கி எழுப்பி விடும். அது மட்டுமல்லாது வாகனத்தின் என்ஜினும் சென்சார் தகவல் வந்ததும் மெதுவாக நின்றுவிடும். வாகன் ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்தினால் வண்டி ஓட்டும் பொழுது ஏற்படும் சாலை விபத்துக்கள், இந்த கருவியின் மூலம் தவிர்க்கப்படும்.

DSC01300_1

ஊட்டி மலைவாழ் சிறுவன் கோகுலின் இந்த செயல் திறனையும், மதி நுட்பத்தையும் வெகுவாக பாராட்டினார் சுவாமி கௌதமானந்த மஹராஜ் அவர்கள். ஊட்டி ராமகிருஷ்ண மடத்திற்கு விஜயம் செய்த சுவாமிகளை தனது சகோதரன், தந்தையுடன் நேரில் சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்ற கோகுல், புதுதில்லியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள ஆயுத்தப் படுத்தி கொண்டிருக்கின்றான்.

One response to “Young Scientist – Eye blink Infra red Sensor

  1. very useful finding from a young child. congratulations and hope it can be made available to larger public by technology transfer.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s