தாயன்பிற்குக் கூலியா?

தாயன்பிற்குக் கூலியா?

ஒரு தாய் தன் மகன் மகேஷுடன் வாழ்ந்து வந்தாள். காலை முதல் இரவுவரை பெருக்குவது, பாத்திரம் கழுவுவது போன்ற வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் மகனே செய்து வந்தான்.

அம்மாவிற்கு ஒரே மகிழ்ச்சி.
மகேஷ் தினமும் பள்ளிக்குச் செல்லும்முன் எல்லா வேலைகளையும் செய்து வந்தான்.

இதனால் சில நாட்கள் அவன் பள்ளிக்குச் செல்லத் தாமதமாயிற்று.
ஒரு நாள் மகேஷ் தாமதமாக வருவதைப் பற்றி நண்பன் ஒருவன் அவனிடம் கேட்டான். பள்ளிக்கு வருமுன் தாய்க்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்வதால் நேரமாகிவிடுகிறது என்றான் அவன்.

நண்பன் கேலியாக, உன் அம்மா, தான் செய்ய வேண்டிய வேலைகளை உன்னைச் செய்ய வைக்கிறாள், ஒரு கூலிக்காரனைப் போல். நானாக இருந்தால், செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் அவளிடம் கூலி கேட்பேன். நீயும் உன் அம்மாவிடம் கேள்’ என்றான்.

நண்பன் சொன்னதில் உண்மை இருப்பதாக எண்ணினான் மகேஷ். பள்ளியிலிருந்து வழியெல்லாம் எப்படித் தன் தாயிடம் இதைக் கேட்பது என்று எண்ணிக் கொண்டே வந்தான்.

மறுநாள் அவன் ஒரு வேலையும் செய்யாமல் கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றான்.

காலையில் எழுந்த தாய் அன்று வீட்டில் ஒரு பெரும் மாற்றத்தைக் கண்டாள். காலை உணவு இல்லை. படுக்கை சுருட்டப்படவில்லை. குப்பைகள் இருந்தன.

சமையலறைக்கு வந்தபோது அவள் மகனின் கடிதத்தைப் பார்த்தாள். அதில்…,
‘அம்மா, நீ என்னை மகனாக நடத்தாமல் வேலைக்காரனாக நடத்துகிறாய். ஆகவே நான் செய்யும் வேலைகளுக்கு நீ கூலி தர வேண்டும்.

‘படுக்கையறையைச் சரிசெய்ய ரூ.4/-;
‘நீர் கொண்டு வர ரூ.3/-;
‘டிபன் தயாரிக்க ரூ.2/-;
‘ஆக மொத்தம் ரூ.9-;

‘நான் வீடு திரும்பும்போது இப்பணம் தேவை.
இப்படிக்கு, மகேஷ்

கடிதத்தைப் படித்த தாய் கண்ணீர் மல்கத் திகைத்தாள். அமைதியாக ஒரு கடிதம் எழுதினாள்.

பள்ளி முடிந்தது. தான் கேட்டபடி தாய் பணம் தருவாள் என்ற ஆவலுடன் வீடு வந்தான் மகன்.

மெல்லப் பின்புறக் கதவைத் திறந்து நுழைந்தான். ஆவலுடன் எதிர்பார்த்த வெள்ளை கவர் மேஜையின் மீது இருப்பதைக் கண்டான். அதிலிருந்த கடிதத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான். அதில்,

அன்பு மகனே! நீ கேட்டதை மிக்க மகிழ்ச்சியுடனும் அன்புடனும் மனமாற ஏற்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று கூற அனுமதிப்பாயா?


பத்து மாதம் உன்னைச் சுமந்து பெற்றேன் – கூலியின்றி,
கூலியின்றித்தான் குளிப்பாட்டினேன் தினமும் உன்னை,
வயிறார உணவு ஊட்டினேன் – கூலியின்றி,
நீ நோயுற்றபோது உனக்காக கண் விழித்தேன் – கூலியின்றி,
கூலியின்றியே உன்னைப் பள்ளிக்கு இட்டுச் சென்றேன்,
மொத்தத்தில் என் அன்புப் பணிகளுக்காகக் கூலி ஏதுமில்லை.
இப்படிக்கு
உன் அன்புத் தாய்

மகேஷ் படித்து முடித்தபோது அவன் உள்ளமெல்லாம் உருகியது. அவனது மனக் கதவும் திறந்தது.

அவனது தாயும் கதவைத் திறந்து உள்ளே வந்தாள் – பணத்துடன்.
மகேஷ் அழுதவண்ணம் ஏதோ கூற வந்தான்.

ஏனப்பா, இந்தப் பணம் போதாதா? எனக்கும் வருத்தம்தான், என்ன செய்ய? ஏழை நான். என்னால் இவ்வளவுதான் பணம் தர முடியும்!” என்றாள் தாய்.

mother

ஓடி வந்தான் மகன். தாயின் கால்களைப் பற்றி மன்னிப்பு வேண்டினான். தன் நண்பனின் பேச்சால்தான் இப்படி நடந்து கொண்டதாகக் கூறினான்.
மனம் மாறிய மகனை அள்ளி அணைத்தாள் தாய்!

One response to “தாயன்பிற்குக் கூலியா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s