How to Love Equally?

ஒரு சிறுமியுடன் அன்னையின் (ஸ்ரீ சாரதா தேவி) உரையாடல்

holymother

அன்னை: மகளே, நீண்ட நாட்களாக என்னை வந்து பார்க்கிறாயே, என்னை நீ நேசிக்கிறாயா?

சிறுமி: ஆம், நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.

அன்னை: மிகவும் என்றால் எவ்வளவு?
அந்த சிறுமி தன் கைகள் இரண்டையும் இயன்ற அளவு விரித்து, ‘இவ்வளவு’ என்றாள்.

அன்னை: நல்லது. நான் இங்கே இல்லாமல் ஜெயராம்பாடிக்குப் போய்விட்டாலும் நீ என்னை நேசிப்பாயா?

சிறுமி: ஆம், நீங்கள் போனாலும் இப்போது போலவே உங்களை நேசிப்பேன். உங்களை மறக்க மாட்டேன்.

அன்னை: அதை எப்படி நான் தெரிந்து கொள்வது?

சிறுமி: உங்களுக்கு நான் அதை எப்படித் தெரிய வைப்பது?

அன்னை: அதற்கு ஒரு வழி உள்ளது. உன் வீட்டிலுள்ள எல்லோரையும் நேசித்தால் அதுவே என்னை நேசிப்பது ஆகும்.

சிறுமி: சரி, நான் எல்லோரையும் நேசிப்பேன்.

அன்னை: நல்லது. நீ அனைவரையும் சமமாக நேசிக்க வேண்டும். ஒருவரை அதிகமாகவும் ஒருவரைக் குறைவாகவும் நேசிக்கக் கூடாது. அனைவரிடமும் உன் அன்பு சமமாக இருக்க வேண்டும்.

சிறுமி: எப்படி நான் எல்லோரையும் சமமாக நேசிப்பது.

அன்னை: அதற்கும் வழி இருக்கிறது. நீ நேசிப்பவர் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே, எதையும் அவர்களிடம் கேட்காதே. நீ கேட்பதாக வைத்துக் கொள்வோம். சிலர் அதிகமாக தருவார்கள், சிலர் குறைவாகத் தருவார்கள். அதிகமாகத் தருபவர்களை அதிகமாகவும் குறைவாகத் தருபவர்களை குறைவாகவும் நீ நேசிக்க நேரும்; உன் அன்பு எல்லோரிடமும் சமமாக இருக்காது. எனவே நீ நேசிக்கின்ற யாரிடமிருந்தும் எதையும் எதிர்ப்பார்க்காமல் இருந்தால் உன்னால் அனைவரையும் சமமாக நேசிக்க முடியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s