Hesitation and Fear – How to overcome?

கேள்வி: தயக்கமும் பயமும் என்னை எப்போதும் துரத்துகின்றன. எனக்குள்ள சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்க பயம். புதியவர்களிடம் பேசத் தயக்கம். தயக்கத்தையும் பயத்தையும் எப்படி வெல்வது?

சுவிர்: தயக்கத்திற்கும் பயத்திற்கும் மூலம் ஒன்றுதான். உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லாததால் தன்னம்பிக்கை இல்லாததால் இவை இரண்டும் வருகின்றன. உன்னை நீ நம்பும்போது உன் திறமைகளை நம்பும்போது உனக்குத் தயக்கம் வராது. பிறரையும் நீ நன்கு நம்புவாய்; பயம் வராது.

தன்னம்பிக்கை இல்லாதவன் பிறரை நம்ப மாட்டான் அல்லது குருட்டாம்போக்காகப் பிறரை நம்பி அவதிப்படுவான். தன்னம்பிக்கை இல்லாதவனுக்குத்தான் தயக்கமும் பயமும் வருகின்றன.

ஒருவன் ஊதாரியாகப் பணத்தை விரயம் செய்து ஜாலியாக இருந்தான். அவன் வீட்டில் நிறைய பணம் இருந்தது. அவனது பெற்றோர் பணத்தை விரயமாக்கக் கூடாது என அவனைக் கண்டித்திருந்தார்கள்.

ஒரு நாள் அவன் வீட்டில் யாரும் இல்லாத போது பணத்தைத் திருடிச் சென்றான். அவனது வீட்டில் பணம் உள்ளதை அறிந்திருந்த ஒரு திருடன் அன்றே வந்து மீதிப் பணத்தையும் திருடிச் சென்றான்.

சொந்த வீட்டில் ஒருவன் திருடுவது தயக்கம் எனில், வெளித்திருடன் வந்து திருடுவது பயம் ஆகும். அதாவது நீ தயங்கி நிற்கும்போது உனக்குப் பயம் வருகிறது. நீ பயப்படும்போது தயக்கம் வருகிறது. இந்த இரண்டாலும் நஷ்டமாவது என்னவோ உனக்குரிய சொத்துதான்.

தன்னம்பிக்கை என்பது உனக்கே சொந்தமான உன் குலச் சொத்து. அதை முறைப்படி வளர்த்து, பாதுகாத்து, அனுபவித்தால் உன் வீட்டின் முழு சொத்தும் உனக்கே கிடைக்கும். பெற்றோரின் அனுமதியுடன் உன் சொத்தை நீயே நல்ல முறையில் அனுபவிக்க முடியும்.

மாறாக, சொத்தினை வளர்த்துப் பாதுகாக்கத் தவறினால், உன் வீட்டில் நீயே ஒரு திருடனாகி விடுகிறாய். திருடனுக்குத்தான் பயமும் தயக்கமும் இருக்கும். அவன்தான் திணறுவான்; தடுமாறுவான்.

lion-and-the-lamb

அதனால்தான் ‘நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன் ரகசியம்” என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s