அந்தக் குழந்தை வேறு எங்கு போயிருக்கும்?

சென்ற நூற்றாண்டில் மேற்கு வங்காளத்தில் கடும்பஞ்சம் தலைவிரித்தாடியது. உணவின்றிப் பலர் இறந்தனர்.

SwAkhandananda

அன்று மாலை. ஒரு முஸ்லீம் அன்பர் மால்டா ராமகிருஷ்ண ஆசிரமத்துக்கு ஒரு குழந்தையுடன் வந்திருந்தார்.
அங்கிருந்தவர்களிடம் பேசிவிட்டு அந்த அறையின் மூலையில் தன் கையிலிருந்த குழந்தையை விட்டு விட்டு மெல்ல வெளியேறப் பார்த்தார்.

ஆசிரமத்தைச் சேர்ந்த சுவாமி ஞானானந்தர் அவரைக் கூப்பிட்டு விசாரித்தார்.

அதற்கு அவர்,சுவாமி, இந்தக் குழந்தை செருப்புத் தைக்கும் ஒரு தொழிலாளியுடையது. இதன் தாய் தந்தை இருவரும் இறந்துவிட்டனர். நான் இதை வளர்த்து வந்தேன். பல காரணங்களால் என்னால் இதைத் தொடர முடியவில்லை. அனாதைகளுக்கு உங்கள் ஆசிரமம் உதவுவதாகக் கேள்விப்
பட்டு இதை இங்கு விட வந்தேன்” என்றார்.

அந்த சுவாமி சார்காச்சி ஆசிரமத்திலிருந்த சுவாமி அகண்டானந்தருக்குக் கடிதம் எழுதினார்.
அடுத்த தபாலில், அக்குழந்தையை இங்கு கொண்டு வா, நான் கவனித்துக் கொள்கிறேன்” என அகண்டானந்தரிடமிருந்து பதில் வந்தது.

சில நாட்களுக்குப் பிறகு குழந்தையை எடுத்துக் கொண்டு சுவாமி ஞானானந்தர் சார்காச்சி ஆசிரமம் சென்றார். சுவாமி அகண்டானந்தர் குழந்தையைத் தமது மடியில் வைத்துக் கொண்டார்.

சில வருடம் கழித்து ஞானானந்தர் சார்காச்சி ஆசிரமம் சென்றபோது அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்த சுவாமி அகண்டானந்தர் மகிழ்ச்சியுடன், பார்த்தாயா? எவ்வளவு பெரிதாக குழந்தை வளர்ந்திருக்கிறது!” என்றார்.

குழந்தை நல்ல பராமரிப்பில் ஆரோக்கியமாக இருந்தது.
சில ஆண்டுகள் சென்றன. ஒரு முறை சுவாமி ஞானானந்தர் சார்காச்சி ஆசிரமம் சென்றார்.

அப்போது சுவாமி அகண்டானந்தர் மிகுந்த துயரத்துடன் அவரிடம், தம்பி, நீ கொண்டு வந்த குழந்தைக்கு நோய் வந்துவிட்டது. என்ன முயன்றும் அதைக் காப்பாற்ற முடியவில்லை” என்று கூறினார்.

ஞானானந்தரோ, சுவாமி அகண்டானந்தரைத் தேற்றும் வகையில், மகராஜ்! யாரோ செருப்புத் தைக்கும் தொழிலாளியுடைய குழந்தை. அவர்களுக்குப் பின் ஓர் இஸ்லாமியர் வளர்த்தார்.

அக்குழந்தையின் நல்ல நேரம் ஸ்ரீராமகிருஷ்ணரின் அன்புச் சீடரான உங்களது அன்பும் கவனிப்பும் கிடைத்தது. இப்படி பாக்கியம் பெற்ற அந்தக் குழந்தை வேறு எங்கு போயிருக்கும்? ஸ்ரீராமகிருஷ்ணரின் மடியில்தான் அமர்ந்திருக்கும்…!” என்றார்.

பரந்த உள்ளமும் குழந்தையின் எளிய மனமும் கொண்ட அகண்டானந்தரும், நீ சரியாகத்தான் சொன்னாய்! ஸ்ரீராம
கிருஷ்ணரிடமே அந்தக் குழந்தை சென்றிருக்கும்” என்றார்.

அநாதைகள், அபலைகள், கல்வியறிவில்லாத சிறுவர்கள் என்றால் உடனே ஓடிச் சென்று அரவணைக்கும் அற்புதமான கருணையுள்ளம் கொண்டவர் சுவாமி அகண்டானந்தர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s