உதவு; உதாரண புருஷன் ஆவாய்

உதவு; உதாரண புருஷன் ஆவாய்

‘நான் செலவு செய்ததைப் பெற்றிருக்கிறேன். நான் கொடுத்ததையும் பெற்றிருக்கிறேன்’ என்கிறார் ஓர் அறிஞர்.
நாம் பிறர்நலனில் அக்கறை கொண்டு வழங்க வேண்டும். நம்மால் பிறருக்கு அள்ளித் தர முடியும்.

கொடுத்திடு, பெறுவதற்காக!
விதைத்திடு, அறுவடை செய்வதற்காக.
விதைக்கவில்லையானால், நிலத்தை நன்கு உழுது எருவிட்ட போதிலும், நல்ல மழைபெய்த போதிலும் அறுவடை செய்ய முடியாது.

நமக்கும் நம் சுற்றத்தார்க்கும் இடையே உள்ள கதவைத் திறந்தாலன்றி, நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள கதவைத் திறக்க முடியாது.

நாம் அறம் செய்வதின் மேலான நன்மை என்னவென்றால், நாம் கொடுப்பதைவிட பல மடங்கு அதிகமாய்ப் பெறுகிறோம்.
ஒலிக்கு எதிரொலி நிச்சயம் உண்டு. நம்மால் பிறரை மகிழ்வுறச் செய்ய முடியும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்வதே இயற்கையானது. அவ்விதம் செய்யாதவன் ஒருபோதும் உண்மை மனிதனாக மாட்டான்.

இலக்கிய மேதை ஆலிவர் கோல்ட்ஸ்மித் இளம் வயதில் மருத்துவம் கற்றார் என்று கேள்விப்பட்டாள் ஒருத்தி.
காலை இழந்து கவலையில் ஆழ்ந்து இருக்கும் தன் கணவனுக்கு மருந்து அனுப்பி வைக்கும்படிக் கடிதம் எழுதினாள் அந்தப் பெண். கோல்ட்ஸ்மித் அவளது வீட்டிற்கு ஒருமுறை சென்றார்.

Goldsmith

அவளது கணவனோடு உரையாடி, அவர்கள் வறுமையால் வருந்துவதைக் கண்டார். ஒரு மணி நேரத்தில் சில மருந்து
களை அனுப்பி வைப்பதாகவும், அவை பலனளிக்கும் என்றும் கூறினார் கோல்ட்ஸ்மித்.

வீடு திரும்பிய கோல்ட்ஸ்மித் தன்னிடம் இருந்த பணத்தைக் கவரில் வைத்து, தேவைப்படும்போது இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பொறுமையோடும் மகிழ்ச்சியோடும் இருங்கள்” என்று எழுதி அவளுக்குக் கொடுத்து அனுப்பினார்.

கோல்ட்ஸ்மித் மிகவும் தாராளத்தன்மை உடையவர். தமது பொருள்கள் அனைத்தையும் பிறருக்குத் தானம் செய்துவிடுவார்.

ஒருமுறை தமது போர்வையைத் தானம் செய்து விட்டு இரவில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.
நாம் முதலில் உதவ வேண்டியது ஏழைகளுக்குத்தான். அதன்பின் வறுமையில் உழலும் நல்ல மனிதர்கள், அனாதைகள், விதவைகள், வயோதிகர்கள், நோயாளிகள் போன்றோர்களுக்கு உதவ வேண்டும்.

வாழ்க்கை என்னும் விருந்தில் ஒவ்வொருவரும் இறுதியில் மரணம் என்ற பானத்தைக் குடித்தே ஆக வேண்டும். அதனால் நாம் உதவ வேண்டும் என்று நினைத்துவிட்டால் அதை அப்போதே செய்துவிட வேண்டும்.

சிறிது தாமதித்தாலும் மனம் மாறிவிடலாம்.
எப்படி உதவுவது என்ற எண்ணமே வேண்டாம்! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. உதவி செய்வதிலும் நிலையான தர்மத்தை மற்றவர்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் செய்வது மிகவும் சிறப்பானது.

அதனை நாமும் செய்ய முடியும். நமக்கும் உதவி செய்யும் சக்தி இருக்கிறது. செயலாற்ற முடியும் என்கிறபோது உதவி செய்யவும் முடியும் என்பதனை என்றும் நினைவில் வைக்க வேண்டும். முடியும் என்று எண்ணினால் கட்டாயம் உதவி செய்ய முடியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s