அந்தக் குழந்தைகள்

அந்தக் குழந்தைகள்

காமராஜர் முதல் அமைச்சராக இருந்த சமயம். ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள். பகல் 11 மணி.

பலர் வந்து அவர் வீட்டு வாசலில் காத்திருந்து பார்த்துப் பேசிவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் அந்த வீட்டு வாசலில் வந்து தயங்கி நின்று கொண்டிருந்தார்கள். பையனுக்கு 12 வயது. பெண்ணுக்கு 8 வயது.

எண்ணெய் காணாத தலை, அழுக்குச் சட்டை, ஏழைக் குழந்தைகள்.
யாரோ ஒருவர் அங்கு வந்து, இங்கு நிற்காதீர்கள், போங்கள்” என்று கூறிவிட்டுப் போனார்.

Kamarajar

அந்தப் பிள்ளைகள் பயந்துகொண்டே விலகிப் போனார்கள். மறுபடியும் அங்கேயே வந்து நின்றார்கள்.
யாரோ ஒரு பிரமுகரை வழியனுப்பி வைக்க வாசல்வரை வந்த காமராஜர் அவர்களைப் பார்த்து,என்ன வேண்டும்?” என்று கேட்டுக்கொண்டே அவர்களிடம் சென்றார்.

அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சிறுமி,அண்ணனுக்கு டைப்புப் பரீட்சை. அதுக்குப் பணம் கட்ட அம்மாவுக்கு வசதியில்லை…” என்றாள்.

அவள் பேசி முடிப்பதற்குள்ளே இவர் ரொம்ப ஆதரவாக அவள் தோளில் தட்டிக் கொடுத்தபடி, அம்மாதான் அனுப்பினார்களா?” என்று கேட்டார்.
இல்ல. நாங்களாவே வந்தோம். அம்மா தினம் அப்பளம் போட்டு விற்று வருவார்கள். அதில்தான் எங்களைப் படிக்க வைக்கிறார்கள்”.

இதற்கு மேலேயும் அவரால் அதைக் கேட்டுக் கொண்டு இருக்க முடியவில்லை.
அம்பி, சத்தியமூர்த்தி பவனுக்கு போன் போட்டு வள்ளியப்பனைக் கூப்பிடு. நான் பேசுகிறேன்” என்கிறார்.

அம்பி அவசரமாக போன் போட்டுக் கொண்டிருக்கிறார். அதற்குள்ளே இவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

போன் போட வேணாம்” என்று கூறிக் கொண்டே மாடிப்படிகளில் வேகமாக ஏறினார்.
அடிக்கடி மாடி ஏறி இறங்க முடியவில்லை என்பதற்காகத்
தான் கொஞ்ச நாளாக அவர் வீட்டு முன் பக்கத்து அறையிலேயே இருந்தார்.

இப்போது திடீரென்று மாடிப்படி ஏறிப்போவது அங்கே இருந்தவர்களுக்கு ஆச்சரியம்.
சிறிது நேரத்தில் காமராஜர் ஒரு கவருடன் திரும்பி வந்தார். ஒட்டப்படாமல் இருந்த அந்த கவருக்குள்ளே பத்து ரூபாய் நோட்டுக்கள் கொஞ்சம் இருந்தன.

சிறுமியிடம் அதைக் கொடுத்து, அண்ணன் பரீட்சைக்குப் பணம் கட்டிடுங்க. அம்மா பேச்சக் கேட்டு நல்ல பிள்ளங்களா நடந்துக்கணும்..” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மறுநாள் – காமராசர் அம்பியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது உதவியாளர் வைரவன் உள்ளே வந்தார்.
நேற்று வந்த அந்தக் குழந்தைகள் மறுபடியும் உங்களைப் பார்க்கணுமாம்” என்றார்.
வரச்சொல்” – காமராஜர்.

இருவரும் உள்ளே வந்து ஒரு ரசீதைத் தந்து, ஐயா, பரீட்சைக்குப் பணம் கட்டியாச்சுங்க. இந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்று கூறிக் காலில் விழுந்து வணங்கினார்கள்.

காமராஜருக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம்; நெகிழ்ச்சி மறுபுறம். குழந்தைகளைத் தூக்கி நிறுத்திச் செல்லமாகத் தட்டிக்கொடுத்து வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பி வைத்தார்.

ஏழைக் குழந்தைங்க. பொய் சொல்ல மாட்டாங்க”ன்னு அப்பவே நினைச்சேன்.. நல்ல பிள்ளைங்க” என்று கூறிக் கொண்டே திரும்பி உள்ளே வந்தார். அவர்தான் காமராஜர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s