அன்றாட வாழ்வில் ஒரு மகான் – சுவாமி சாரதானந்தர் ஜயந்தி

சுவாமி சாரதானந்தர் ஜயந்தி தினம் 27-12-2014

அன்றாட வாழ்வில் ஒரு மகான்

ஒரு முறை ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர் சரத்தின் மடி மீது சில கணம் அமர்ந்து எழுந்தார். “சரத்தால் எவ்வளவு பளுவைச் சுமக்க முடியும் என்பதைப் பரிசோதித்தேன்” என்றார் குருதேவர்.

அந்த சரத்தே பிற்காலத்தில் சுவாமி சாரதானந்தராக மலர்ந்து ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் பொதுச் செயலாளரானார். அவர் நோயுற்ற துறவிகளையும் பக்தர்களையும் நன்கு கவனிப்பார்,

Swami_Saradananda_seated

கோடைக் காலத்தில் ஒரு பகலில் சுவாமிகள் யாரையோ சந்திக்கக் கிளம்பினார். அவர் தனியாகச் செல்வதைக் கண்ட ஒரு துறவி சுவாமி அசேஷானந்தரை உடன் அனுப்பினார்.

அசேஷானந்தர் சென்றபோது சுவாமிகள் அவரிடம், வெயில் அதிகமாக உள்ளதால் மடத்திற்குத் திரும்பி போகும்படி கூறினார். அவர் இணங்காததால் இருவரும் கொல்கத்தா எஸ்ரா தெருவை அடைந்தனர்.

உஷ்ணமான காற்று வீசிய பகுதியில் சிறிது தூரம் நடந்து ஒரு பக்தரின் வீட்டிற்குள் அவர்கள் சென்றனர்.

பார்ஸி சமூகத்தை சேர்ந்த கொக்கானி என்ற பக்தர் முற்றிய காசநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். சுவாமி சாரதானந்தரைக் கண்டதும் அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்த அவர் சுவாமிகளின் கைகளைப் பற்றிக் கொண்டார். ஒரு சாதுவிடம் நடந்துகொள்ளும் முறை பற்றியெல்லாம் அவர் கவனிக்கவில்லை.

சுவாமிகளும் அவரது படுக்கையில் அமர்ந்து அவரது தலை மீது தமது கரத்தால் மெதுவாக வருடிவிட்டார்.

கொக்கானி தமது சகோதரரிடம் பழங்களையும் இனிப்புகளையும் வாங்கி வரச் சொன்னார். அவர் வந்ததும் தம் கைகளைக் கழுவாமலேயே பழங்களை வெட்டி ஒரு தட்டில் வைத்து, அவற்றுடன் சில இனிப்புகளையும் சேர்த்து சுவாமிகளுக்குச் சமர்ப்பித்தார்.

அவற்றைச் சாப்பிட்டால் சுவாமிகளுக்கும் நோய் தொற்றிவிடும் என்று பயந்த அசேஷானந்தர் , “கொக்கானி, மகராஜ் இப்போது தான் சாப்பிட்டார். அவரால் எதையும் உண்ண முடியாது என நினைக்கிறேன்” என்றார். ஆனால் கொக்கானியோ அவற்றை எடுத்துக்கொள்ளும்படி சுவாமிகளிடம் கெஞ்சினார்.

சாரதானந்தர் சிலவற்றை ஏற்றுக் கொண்டு மீதியை அசேஷானந்தரிடம் நீட்டினார். அவரும் சிறிது உட்கொண்டார், பிறகு சுவாமிகள் அங்கு சற்று நேரம் தியானம் செய்தார். விடைபெற்றுத் திரும்புகையில் கொக்கானியின் நிலவரத்தைத் தமக்கு அவ்வப்போது தெரிவிக்கும்படி அவரது சகோதரரிடம் சுவாமிகள் கூறினார்.

வழியில் அசேஷானந்தர் சுவாமிகளிடம், “நீங்கள் அந்தப் பழங்களை உண்டிருக்கக் கூடாது. ஏனெனில் காசநோய் ஒரு தொற்று நோய். தாங்கள் எங்களுக்கு மிகப் பெரிய பொக்கிஷம்” என்றார்.

sw_saradanandar

சுவாமிகள் அதற்கு, ‘அன்புள்ளம் கொண்டவர்களிடமிருந்து உணவைப் பெறுவதால் எந்தக் கெடுதலும் வராது’ என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதையே பதிலாகத் தெரிவித்தார்.

சில தினங்களில் கொக்கானியின் மறைவைப் பற்றிய தகவல் அவரது சகோதரரிடமிருந்து வந்தது. மேலும் சுவாமிகளது வருகையும் அவரது அன்பும் தம் சகோதரருக்கு ஆறுதல் தந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இது பற்றி எழுதும்போது அசேஷானந்தர், ‘மரணத் தருவாயில் உள்ளவரிடம் விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

‘மகான்களின் அன்பின் ஆழத்தை யாரால் அளவிட முடியும்? அவர்கள் நமக்காக அற்புதங்கள் செய்யலாம். ஆனால் அவர்களது செய்கைகளைக் கடவுளால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்’ என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s