அம்மாவா? அரசு அதிகாரியா?

அம்மாவா? அரசு அதிகாரியா?

ஆஷுதோஷ் முகர்ஜி கல்கத்தாவின் பிரதம நீதிபதியாகவும், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தவர்.
தமது தாயார் ஜகத்தாரிணி தேவியின் அன்பால் மிகவும் கவரப்பட்டார் ஆஷுதோஷ். தமது வாழ்வில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் போதெல்லாம் தாயின் அறிவுரைப்படியே நடந்து வந்தார் அவர்.
கர்சன் பிரபு (Lord Curzon) அப்போதைய வைசிராய். இளவரசர் ஏழாம் எட்வர்டுக்கு லண்டனில் முடிசூட்டு விழா நடைபெற இருந்தது.
கர்சன் : மிஸ்டர் முகர்ஜி! எங்கள் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு நீங்கள்தான் இந்நகரின் பிரதிநிதியாகச் சென்று விழாவைச் சிறப்பிக்க வேண்டும்!
முகர்ஜி : மேன்மை பொருந்திய வைசிராய் அவர்களே! தாங்களே என்னைப் பொருட்படுத்தி இந்த முடிசூட்டுவிழா வைபவத்திற்கு அழைப்பது எனக்கு மிகுந்த கௌரவம்.
கர்சன் : அப்படியானால் லண்டன் செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
முகர்ஜி : மன்னிக்க வேண்டும் பிரபு. எங்கள் சாஸ்திரப்படி நாங்கள் கடல் கடந்துபோக முடியாது.
கர்சன் : அதனால் என்ன? இம்மாதிரி வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. நீங்கள் அவசியம் லண்டன் செல்லத்தான் வேண்டும்.
முகர்ஜி : நானே விரும்பினாலும், என் தாயார் இதற்குச் சம்மதிக்க மாட்டார். நான் என்ன செய்ய முடியும்?
கர்சன் : (கோபமாக) உங்கள் அன்னையிடம் கூறுங்கள். இந்நாட்டின் கவர்னர் ஜெனரல் லார்ட் கர்சன் உங்களுக்கு ஆணையிட்டதாக…
முகர்ஜி : மேன்மை தாங்கிய பிரபு அவர்களே! எனது தாயார், தனது மகனுக்குத் தன்னைத் தவிர வேறு யாரும் ஆணையிடுவதை ஒருபோதும் ஏற்கமாட்டார்!
கர்சன் பிரபு மௌனமானார்.

One response to “அம்மாவா? அரசு அதிகாரியா?

  1. Mothers are intuitive i think. Great Women can get premonition i think. At the same time Have to be realistic too. Am thinking if Mom’s intuition is still relevant in this age of criss cross communiccation across the globe.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s