மூடநம்பிக்கைகள்

கேள்வி: எந்த மதத்தில் மூடநம்பிக்கைகள் அதிகமாக உள்ளன? இந்து மதத்திலா? கிறிஸ்தவ மதத்திலா? இஸ்லாமிய மதத்திலா?

Indian

பதில்: மதத்தில் மட்டும்தான் மூடநம்பிக்கை உள்ளதா? பலரும் பல நேரங்களில் மூடநம்பிக்கைக்கு அடிமையாகியே உள்ளனர். கிருஷ்ணா, நீ நம்பவில்லையா?

தன் லட்சியங்களைப் பற்றி விளக்காமல், பல லட்சங்களைச் செலவு செய்து தேர்தலில் நிற்கும் ஓர் அரசியல் பிரமுகர் வாய்ச்சவடால்களையே வாக்குறுதிகளாக அள்ளி வீசுகிறார்.
தலைவனின் லட்சியம் என்ன? அப்படி ஒன்று அவரிடம் இருக்கிறதா? என்றுகூடப் பார்க்காமல், அவன் விட்டெறிந்த லட்சங்களை மட்டுமே பொறுக்கிக் கொள்ளும் அவனது தொண்டனும் வாய்ச்சவடால்களை நம்பி வாக்களிக்கிறான்.
அது என்ன நம்பிக்கை?

ஓர் ஆசிரியர் மாணவனைப் பார்த்து ‘நீ சரியான மக்கு. உனக்குப் படிப்பே வராது’ என்கிறார். அந்த மாணவனும் உடனே ‘தான் ஒரு மக்கு’ என்றே நம்ப ஆரம்பிக்கிறான்.
இது என்ன நம்பிக்கை?

பல ஆண்களும் பெண்களும் நன்றாக உடுத்திக் கொண்டு வெளியே கிளம்பும்போது ஒவ்வொருவரும் தன்னையே கவனிக்கிறார்கள் என்று நம்பி ஏமாறுகிறார்கள்.
இது என்ன நம்பிக்கை?

ஒரு தோல்வி வந்ததும், ‘நான் தொலைந்தேன். இனி யாரும் என்னை மதிக்க மாட்டார்கள்’ என்று தன் மீதே அவநம்பிக்கை கொள்வதும் மூடநம்பிக்கைதான். அப்படி ‘அவ’ நம்பிக்கை கொள்ளும் அவன் ‘மூட’ன்தானே?

சமயங்கள் எதுவானாலும் அவை இரண்டைத் தெளிவாக்க வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
1. சமயக் கருத்துக்கள் மனிதனுக்கு முதலில் தன்னம்பிக்கையைத் தர வேண்டும். அந்தத் தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை.
2. அத்தன்னம்பிக்கை ஒருவனை உண்மையான – உயர்ந்த தெய்வத்தை நம்பும்படி செய்ய வேண்டும். தன்னம்பிக்கை தெய்வ நம்பிக்கையாகப் பரிணமிக்க வேண்டும்.
இந்த இரண்டும் இல்லாத இடங்களில், எல்லாத் தலைவர்களும் மூடநம்பிக்கைகளேயே வளர்க்கிறார்கள் எனலாம்.

ஆகவே, எந்த மதத்தில் மூடநம்பிக்கை அதிகம் என்று பார்க்காதே. எல்லா மதத்திலும் உள்ள சிறப்பம்சங்களை ஏற்றுக்கொண்டு, தனது மதத்தை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதுதான் இந்திய மார்க்கம். மேலே உள்ள படத்தைப் பார்.

One response to “மூடநம்பிக்கைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s