எனக்கு ஆன்மீகம் வேண்டும்

எனக்கு ஆன்மீகம் வேண்டும்

ஒரு சீடன் தன் குருவிடம் சென்று, ஐயா, எனக்கு ஆன்மீகம் வேண்டும் என்றான். குரு அந்த இளைஞனைப் பார்த்து அமைதியாகப் புன்முறுவல் மட்டும் பூத்தார், எதுவுமே பேசவில்லை. இளைஞன் ஒவ்வொரு நாளும் வந்து, தனக்கு ஆன்மீகம் வேண்டுமென வற்புறுத்தினான். அந்த முதியவர் இளைஞனைவிட விஷயம் தெரிந்தவர்.

ஒருநாள் வெயில் கடுமையாக இருந்தது. அன்று அவர் அந்த இளைஞனைத் தம்மோடு ஆற்றுக்கு நீராட அழைத்துச் சென்றார். அவன் நீருக்குள் இறங்கி மூழ்கியதும், முதியவர் அவனைப் பிடித்து, பலவந்தமாக நீரினுள் அமிழ்த்தி வைத்துக் கொண்டார். அவன் திணறிப்போய் வெளியே வரப் போராடினான். சிறிதுநேரம் அவர் விடவே இல்லை. பிறகு அவனை விட்டார். சோர்ந்துபோய் தலையை மேலே தூக்கினான் அவன்.
அப்போது அவர் அவனிடம், நீரினுள் இருந்தபோது உனக்கு மிகவும் தேவையாக இருந்தது எது? என்று கேட்டார். மூச்சுக் காற்று என்றான் சீடன். ஆம், இறைவன் வேண்டும் என்று அவ்வாறே நீ நினைக்கிறாயா? அவ்வளவு தூரம் இறைவனின் தேவையை உணர்ந்தாயானால் அவனைப் பெறுவாய் என்றார் குரு.

breathing

அந்தத் தாகம், அந்த ஆசை உன்னிடம் எழும்வரை, உன் அறிவாலோ, உனது சாஸ்திரங்களாலோ, உருவங்களாலோ, நீ எவ்வளவுதான் பாடுபட்டாலும் ஆன்மீகத்தைப் பெற முடியாது. அந்தத் தாகம் உன்னிடம் எழும்வரை, நீ நாத்திகனைவிட மேலானவன் அல்ல.

Source: Book: Palsuvai Kathaigal (Tamil)
Swami Vivekananda

One response to “எனக்கு ஆன்மீகம் வேண்டும்

  1. itiseasy to loose track. and lot of times can misunderstand what is being conveyed.
    Pranams

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s