தந்தை இப்படி இருந்ததால்தான் மகன் அப்படி உயர்ந்தார்

தந்தை இப்படி இருந்ததால்தான் மகன் அப்படி உயர்ந்தார்

ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்களுள் மிகச் சிறந்தவர் நாகமகாசயர். அவரது தந்தையார் தீனதயாள் இளம் வயதிலேயே மனைவியை இழந்தாலும், மறுமணம் செய்து கொள்ளவில்லை.

Nag-Mahashay_t

தீனதயாள் கல்கத்தாவில் உப்பு ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வந்தார். படகுகளில் உப்பை ஏற்றி, காட்டு வழிக் கால்வாயில் செல்வார்.

காட்டுப் பாதையில் வழிப்பறிக் கொள்ளை அதிகம். அதனால் எப்போதும் நம்பகமான அதிகாரிகளை உடன் அனுப்புவது அந்த நிறுவனத்தின் வழக்கம்.

ஒருமுறை தீனதயாள் உப்புப் படகுடன் சென்று கொண்டிருந்தார். இருட்டில் காட்டு வழியைக் கடந்து செல்ல இயலாத நிலை. எனவே, கரையிலிருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தையும், ஓரிரு குடியானவர்களின் வீடுகளையும் கண்டவுடன், அங்கேயே படகைக் கரையில் கட்டிவிட்டு வேலையாட்கள் இரவு உணவருந்திவிட்டு உறங்கச் சென்றனர்.

தீனதயாள் மட்டும் படகிலேயே இரவு முழுவதும் காவல் இருந்தார். பொழுது விடிந்ததும் படகை விட்டிறங்கி, எதிரிலிருந்த பாழடைந்த கட்டிடத்தை நோக்கித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் சென்றார். சுறுசுறுப்பான அவர், விரல்களால் தரையைக் கிளறிக் கொண்டிருந்தார்.
அங்கே இரண்டொரு தங்க நாணயங்கள் தென்பட்டன. மேலும் தோண்டிப் பார்க்கவே, ஒரு புதையல் பானை அகப்பட்டது. ஒரு கணம் அந்நாணயங்களைக் கையில் எடுத்துப் பார்த்தார்.

அடுத்த நிமிடமே அவற்றைப் பழையபடி மண்ணில் போட்டு மூடிவிட்டு, வெளியே ஓடி வந்தார். வேலை ஆட்களை அவசரப்படுத்தி, உடனேயே படகைக் கிளப்பச் செய்து அந்த இடத்தை விட்டகன்றார்.

பின்னாளில் இதைப் பற்றிக் கூறுகையில், என் மனதில் ஆசை ஏற்படுவதை நான் உணர்ந்தேன். உழைக்காமல் செல்வந்தனாகும் எண்ணம் தோன்றியவுடனேயே என் தவறை உணர்ந்து கொண்டேன்.

இச்செல்வம் ஒரு வேளை யாராவது பிராமணனுக்குச் சொந்தமானதாக இருந்தால், நாம் நீண்ட நரகத்தில் அல்லவா விழ வேண்டியிருக்கும்? இந்த எண்ணம் வந்த உடனேயே மூச்சுவிடக்கூட அவகாசம் தராமல் ஆட்களை விரட்டி அங்கிருந்து சென்றுவிட்டேன்” என்றார்.

பின்னாட்களில் நாம் நாகமகாசயரிடம் பார்த்த அத்தனை மேன்மையான குணங்களுக்கும் அஸ்திவாரம் அவரது தந்தையின் இந்த நேர்மைதான் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s