திறமை, வலிமை, பொறுமை

திறமை, வலிமை, பொறுமை

angels

ஒரு பெரியவர், கடுகளவு உன்னிடம் நம்பிக்கை இருந்தால்கூட போதும்,ஒரு பெரிய மலையையே புரட்டலாம்!” என்றார்.

அது எப்படி முடியும்!” -நான் யோசிக்க ஆரம்பித்தேன்.
நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதற்காகக் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்!” – என்றேன்.

அப்படி இல்லை, இந்தக் கதையைக் கேள்!”என்று ஆரம்பித்தார்.

இது சீன தேசத்துக் கதை. (சீன அதிபர் மாசேதுங் – பொதுக் கூட்டங்களில் சொன்ன கதை.)
சீனாவில் ஷாங்காய் மாநிலத்தில் ஒரு சிறு கிராமம். அங்கு வயதான ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர்கள் வீட்டு வாசலில் வழியை இரு பெரிய மலைகள் அடைத்துக் கொண்டிருந்தன.

எப்படியாவது அந்த இரண்டு மலைகளையும் இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்கிவிட முடியும் என்பது அவரது நம்பிக்கை. உடனே செயலில் இறங்கினார்.

இரண்டு பிள்ளைகளுடன் கடப்பாறைகளை எடுத்து உடைக்க ஆரம்பித்தார். வயதான காலத்தில் இப்படி இவர் மலையை உடைப்பதை அவ்வழியாகச் சென்ற அனைவரும் பார்த்தார்கள்!
அவர்களுக்குச் சிரிப்புத்தான் வந்தது! அந்தப் பெரியவருக்கு வேண்டிய ஒருவர் சொன்னார்.

ஏங்க… நீங்கள் செய்யும் வேலையில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? மலை எவ்வளவு பெரியது. அதை நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து உடைத்துத் தள்ளி விட முடியுமா? பேசாமல் இதை விட்டுட்டு வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் செய்யுங்கள்!” என்றார்.

அந்தப் பெரியவருக்கு ஆவேசம் வந்துவிட்டது.
என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் மூன்றுபேர்தானே இருக்கிறோம் என்பதால்தானே அப்படிச் சொல்கிறீர் கள்? அதனால் என்ன?

நானும் என் பிள்ளைகளும் ஆரம்பித்ததை முடிக்க முடியாமல் நான் இறந்துவிட்டால் என் பிள்ளைகள் இதைத் தொடர்ந்து செய்வார்கள். அவர்களும் இறந்து விட்டால் என் பேரன்கள் தொடர்ந்து செய்வார்கள்!

இப்படி… வாழையடி வாழையாக இந்த வேலை தொடரும்! ஒரு கட்டத்தில் இந்த இரண்டு மலைகளும் தரைமட்டமாகும். இப்போதைக்கு இது இரண்டும் பெரிய மலைதான். அதை ஒப்புக் கொள்கிறேன்!
ஆனால் ஒன்று நிச்சயம். இது ஓர் அங்குலம்கூட வளரப்போவதில்லை. ஆகையினால் நாங்கள் உடைக்க உடைக்க அது குறைந்து கொண்டேதான் வரும்.
என்றைக்காவது ஒரு நாள் என் வாரிசுகள் இந்த மலைகளைத் தரைமட்டமாக்குவார்கள்! வாசல் வழியை நன்றாக அமைப்பார்கள்! அந்த நம்பிக்கை எனக்கு உண்டு!” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து மலையை உடைக்க ஆரம்பித்தார்.

இவருக்குப் போய் புத்தி சொல்ல வந்தோமே என்று புலம்பிக் கொண்டே அவர்கள் போய்விட்டார்கள்.

மலையை உடைக்கிற வேலை தொடர்ந்து நடந்தது. இரவு பகலாக நடந்தது. இவர்கள் படும்பாட்டைப் பார்த்து கடவுளே யோசிக்க ஆரம்பித்தார். இவர்க ளுக்கு உதவி செய்ய வேண்டுமென நினைத்தார்.

அவர்களுடைய உழைப்பையும் உழைப்பின் மேல் வைத்திருக்கிற நம்பிக்கையையும் இரண்டு தேவதைகளாக ஆக்கினார். ஒரு நாள் இரவோடு இரவாக அந்த இரண்டு மலைகளையும் அகற்றும்படி உத்தரவிட்டார்.

ஒரு நாள் காலை. விடிந்தவுடன் எழுந்து பார்த்தார்கள். மலை இருந்த இடம் காலியாக இருந்தது!
பெரியவரும் அவருடைய பிள்ளைகளும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அந்த இரண்டு மலைகளும் என்ன தெரியுமா?
ஒன்று வறுமை. இன்னொன்று பற்றாக்குறை.
அந்த இரு தேவதைகளும் யார் தெரியுமா? ஒன்று – உழைப்பு, இன்னொன்று – நம்பிக்கை.

பொதுமக்கள்தான் – கடவுள்.

திறமை, வலிமை, பொறுமை – இவையே அந்தப் பெரியவர், அவரது இரண்டு பிள்ளைகள் ஆவர்.

உறுதியோடும் நம்பிக்கையோடும் செயல்பட்டால் எந்த விதத் தடையையும் உடைத்தெறிய முடியும் என்பது தான் இக்கதையின் கருத்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s