கருணை தந்த கொடை

கருணை தந்த கொடை
போஸ்னியா நாட்டில் போர் நடந்தது. போரில் குண்டுகள் வீசப்பட்டுப் பல கிராமங்கள் அழிந்தன.

போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. வறுமையில் வாடிய மக்கள் ஒளிந்து வாழ்ந்தனர்.
ஓர் இளைஞனின் மரணச் செய்தி அறிந்த அவனது இளம் மனைவி பயந்தவாறு கணவனின் உடலைக் காண கிராமத்திற்கு வந்தாள். கதறியழுதவாறு அவள் அவனது உடலைப் போர்த்துவதற்காக ஒரு துணியை எடுக்க வீட்டிற்குள் சென்றாள்.

அப்போது தான் ஆசையுடன் வளர்த்து வந்த தங்க மீன்கள் ஆகாரமின்றி வாடுவதைக் கண்டாள். இரக்கம் கொண்டு, அவற்றைக் கிணற்றில் கொட்டிவிட்டு, அவசர அவசரமாக ஓடிவிட்டாள்.

போரினால் கிராமம் முழுவதும் நாசமாகிவிட்டது.
சில காலம் கழித்துப் போர் முடிந்தது. கிராமத்திற்குத் திரும்பி வந்த அனைவரும் இப்போது ஒன்றுமில்லாத ஏழைகள்.

goldfish

இந்தப் பெண்ணின் வீடும் மற்ற உடைமைகளும் பறிபோயிருந்தன. ஆனால் அவள் கிணற்றில் விட்ட தங்க மீன்கள் பல்கிப் பெருகிக் கிணற்றையே நிறைத்திருந்தன.

அந்த அலங்கார மீன்களை விற்று, அவள் மீண்டும் நிறையப் பணம் பெற்றாள். தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பெரும் உதவி செய்தாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s