Ram Namam…

ராமசரண் ஒரு பக்தர். ராம நாமத்தை அவர் தினமும் ஜபித்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் ராமசரண் வீட்டின் அருகே கிளிக்குஞ்சு ஒன்று அடிபட்டு வந்தது.
அதை அவர் கூண்டில் அடைத்து வளர்த்து வந்தார். அதற்குப் பேச்சுக் கற்றுக் கொடுத்தார். ராம நாமத்தையும் சொல்லித் தந்தார். கிளியும் அடிக்கடி ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தது.
கிளி சில நேரம் ராமாயணத்தில் உள்ள சில விவரங்களைக் கேட்கும். ராமசரண் அதற்கு விளக்கமாகப் பதில் அளிப்பார்.

ஒரு நாள் ராமசரண் ஒரு ஞானியைச் சந்திக்கப் புறப்பட்டார். அப்போது கிளி அவரிடம், அந்த ஞானியிடம், ‘ராம நாமத்தை ஜபித்தால் நன்மை கிடைக்கும் என்கிறார்கள். நான் தினமும் ஜபிக்கிறேன். எனக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லையே, ஏன் என்று’ கேட்டு வாருங்கள்” என்றது.
lord-rama
ராமசரண் திரும்பி வந்ததும் கிளி அவரிடம், ஞானி என் கேள்விக்கு என்ன பதில் கூறினார்?” என்று கேட்டது.
நான் உன் கேள்வியைக் கூறியதும் எந்தப் பதிலும் கூறாமல் ஞானி மௌனமாக இருந்துவிட்டார்” என்றார். கிளி பதிலே கூறவில்லை.

ஆனால் மறுநாள் அதிகாலையில் கூண்டிற்குள் பேச்சு மூச்சற்று கிடந்தது. ராமசரண் மிகவும் துயரப்பட்டார்.
கிளி இறந்துவிட்டதாக எண்ணி அதை எடுத்துச் சென்று மலர்களைக் கொண்டு மூடி ஒருமரப் பொந்தில் வைத்தார். பின் கிளியின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்பதற்காக ராமர் மீதான பாடலைப் பாடினார்.

சிறிது நேரத்தில் கிளி திடீரென்று
பறந்து ஒரு மரக் கிளையில் அமர்ந்தது.
ராமசரண் அதிர்ந்தவராக, என் அருமைக் கிளியே, இறந்தது போல நடித்து ஏன் என்னை ஏமாற்றினாய்?” எனக் கேட்டார்.

சுவாமி, நான் உங்களை ஏமாற்றவில்லை. என் கேள்விக்குப் பதிலும் கூறாமல் ஞானி மௌனமானார் என்று சொன்னீர்களே, அதன் தத்துவத்தை நான் புரிந்துகொண்டேன்.
ராம நாமத்தை வாயால் கூறினால் மட்டும் போதாது. அதை ஆவி ஒடுங்கும் அளவிற்கு ஆத்மாவோடு கலக்க வேண்டும் என்பதுதான் அவர் கூறிய விளக்கம். அதை நான் கடைப்பிடித்து மயக்க நிலையில் இருந்தேன். நான் இறந்ததாகக் கருதி எனக்கு விடுதலை அளித்தீர்கள்.

ராம நாமத்தை ஜபிக்க வேண்டும் என எனக்குக் கூறிய உங்களுக்கு, என்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வரவில்லையே?” என்று கூறியபடி கிளி பறந்து சென்றது.
ராமசரண் தன் அறியாமைக்காக வெட்கப்பட்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s