அனைவருக்கும் அம்மாதான்…

அனைவருக்கும் அம்மாதான்…

ஹாலிவுட்டில் வேதாந்த சொசைட்டியின் நூல் நிலையம் அது. அங்கே தயங்கியபடி உள்ளே வந்த ஓர் இளைஞன், இது என்ன சர்ச்சா?” என்றான்.

பதில் வருவதற்கு முன்பே, என் தாய் இறந்து கொண்டிருக்கிறாள். நீங்கள் யாராவது அவளுக்காகப் பிரார்த்தனை செய்யக் கூடாதா?” என வேண்டினான்.

அந்த இளைஞனிடம், நீ யார்? உன் அம்மாவிற்கு என்னவாயிற்று? உன் தாயின் புகைப்படம் இருந்தால் பிரார்த்திக்க உதவும்” என்று அன்புடன் நூலகர் சொன்னதும்,
சிறிது நேரத்தில் அவன் வீட்டிற்குச் சென்று பத்து வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட அவனது தாயின் புகைப்படத்துடன் திரும்பினான்.

SSD

அவன் பெயர் சோனி. தாயாரின் பெயர் மினா.
அவர்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள். சோனி தற்போது அமெரிக்கக் கடற்படை வீரன். ஈராக் போர்க்களத்தில் பணி புரிகிறான். அம்மா, புற்றுநோயால் இறக்கும் தருவாயில் இருப்பதால் சிறப்பு அனுமதியில் அமெரிக்கா திரும்பியுள்ளான்.

தாயும் மகனும் இருந்த அப்புகைப் படத்தை நூலகர், அங்கிருந்த ஸ்ரீசாரதாதேவி படத்தின் அருகில் வைத்தார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை. மடத்துத் துறவி ஆன்மிக வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். நூலகத்திற்குள் தன் தாயுடன் சோனி நுழைந்தான். அவன் தாய் பெரிதாக அழுது கொண்டே வந்தாள். ஸ்ரீசாரதாதேவியின் படத்தருகே வைத்திருந்த தம் படத்தைப் பார்த்து, இது நீ தந்த புகைப்படமா?” என்று கேட்டாள்.

ஆம்” என்றான் சோனி. சொற்பொழிவை முடித்து வெளிவந்த சுவாமிகளை மினா சந்திக்க ஏற்பாடு செய்தார் நூலகர். சுவாமிகளிடம் பேசிவிட்டு இருவரும் வீடு திரும்பினர்.

ஒரு மாதம் சென்றது. மதிய வேளையில் ஒரு பெரிய பூங்கொத்துடன் அவசரமாக உள்ளே நுழைந்தாள் மினா. நேராக ஸ்ரீசாரதா தேவியின் படத்திற்கு மலர்க் கொத்தை அர்ப்பணித்தாள்.

மஞ்சள், ஊதா, ஆரஞ்சு, கருஞ்சிவப்பு நிறங்களில் மலர்கள் நிறைந்திருந்த அந்தப் பூங்கொத்து அன்னையின் நிறத்திற்குப் பொருத்தமாக அமைந்திருந்தது. என்ன விந்தை! மினாவின் முகமோ பத்து ஆண்டுகளுக்கு முன் புகைப்படத்தில் இருந்
ததைப் போல அழகுடன் திகழ்ந்தது.

அன்னையைப் பார்த்தபடி வெகு நேரம் கண்ணீருடன் அங்கு நின்றாள் மினா. இந்த அழுகை தனக்காக அல்ல, தான் அன்னையிடம் பெற்ற கருணைக்காக என உணர்ந்தாள் மினா.

பின்னர், பலமுறை கோவிலுக்கு வந்து தியானத்தில் அமர்ந்திருப்பாள் மினா. சாதுக்களிடம் பேசிக்கொண்டிருப்பாள். பின்பு அந்த நூலகத்திற்கு வந்திருந்து அன்னையின் படத்தைப் பார்த்தபடி சில நிமிடம் நிற்பாள்.

இரண்டு மாதத்திற்கு முன் ஒரு நாள், நூலகத்திற்கு வந்தவள் அன்னையின் படத்தின் முன் நின்று அழுதாள். எனக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. அதனால் என் மகனை மீண்டும் ஈராக் அனுப்புகிறார்கள். நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?” என்று பிரார்த்தித்தாள்.

அதன் பின்பு, மினாவை நூலகர் பார்க்கவே இல்லை.
தன் தாய் இறந்துவிட்டதாக சோனி வந்து நூலகரிடம் சொன்னான். அவளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மகன் சோனி நூலகரை அழைத்தார். நூலகர் மினா தங்கியிருந்த அறைக்கும் சென்றார்.

ஈரானிய இஸ்லாமியருக்கும், இத்தாலிய கத்தோலிக்கத் தாய்க்கும் மகளாகப் பிறந்த மினாவின் அறையில் அவர் கண்ட காட்சி என்ன தெரியுமா?

அன்னை ஸ்ரீசாரதையின் படங்கள்தான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s