யாரும் விரும்பவில்லை!

புத்த பூர்ணிமா

யாரும் விரும்பவில்லை!

இகம், பரம் இரண்டினுள் இகத்தின் பொருட்செல்வத்தை அடைவதற்கும், பரத்தின் அருட்செல்வத்தை அடைவதற்கும் இந்த உலகமே நிலைக்களனாக இருக்கிறது.

ஆனாலும் பல கோடி உயிர்கள் இகத்துக்குரிய செல்வத்தை அடையவே முயற்சி செய்கின்றன. இவற்றையெல்லாம் யோசித்த ஒரு பக்தருக்கு இது ஏன்? என்ற சந்தேகம் வந்தது. அவர் புத்தரிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார்.

சுவாமி! யாரும் முக்தி அடைய முடியும் என்று போதிக்கிறீர்கள். எல்லோரும் முக்தி அடையலாம் என்
றால், தங்களைப் போன்றவர்களைத் தவிர வேறு எவரும் முக்தி அடையவில்லையே, ஏன்? என்று கேட்டார்.

சரி. இந்தக் கிராமத்திற்குள் சென்று, ஒவ்வொருவரிடமும் நீங்கள் மனதார என்ன விரும்புகிறீர்கள்? என்று அறிந்து வா என அவரை அனுப்பினார் புத்தர்.

Budda

அவர் சென்று திரும்பிய பிறகு, ஒவ்வொருவரும் விரும்பியதைச் சொல் என்றார். அவர், நிலம், பதவி, பணம், சொத்து எனப் பலரும் பலவிதமாக விரும்பியதாகக் கூறினார்.

முக்தி அடைய விரும்பியவர்கள் எத்தனை பேர் என்று சொல் -புத்தர்.

ஒருவர்கூட முக்தி அடைய விரும்புவதாகச் சொல்லவில்லை என்றார் பக்தர் அதிர்ச்சியுடன்.

அதனால்தான் எல்லோரும் முக்தி அடைய இயலும் என்று நான் கூறுகிறேனே தவிர, எல்லோரும் முக்தி அடைய விரும்புகிறார்கள் என்று கூறுவதில்லை. எவர் முக்தி அடைய வேண்டும் என்று மனதார விரும்புகிறார்களோ, அவர்களே தமது விருப்பத்திற்கேற்ப முக்தி அடைகிறார்கள் என்றார் புத்தர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s