Everyday Miracle

மிக அதிசயம் எது?
பழங்கால இந்தியாவில் ஓர் அரசன் இருந்தான். அவனிடம் நான்கு கேள்விகள் கேட்டார்கள்;
இந்த உலகத்தில் மிகவும் அற்புதமானது எது? என்பது முதற்கேள்வி.

நம்பிக்கை என்று விடை வந்தது. அது மிகவும் வியக்கத் தக்கது. இரவிலும் பகலிலும் நம்மைச் சுற்றிப் பலர் செத்துக் கொண்டேயிருப்பதை நாம் பார்க்கிறோம்.

ஆனாலும் நமக்கு மரணம் இல்லை என்று நினைக்கிறோம். நாமும் சாகத்தான் வேண்டும் என்றோ, நமக்கும் துன்பங்கள் நேரும் என்றோ நாம் நினைப்பதில்லை. ஏமாற்றங்களுக்கு எதிராக, தடைகளுக்கு எதிராக, நியாயங்களுக்கு எதிராகத் தனக்கு வெற்றி கிடைக்கும் என்றே ஒவ்வொருவனும் எண்ணுகிறான்.

உண்மையில் இதுவரை யாருமே இந்த உலகில் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. ஒரு மனிதனிடம் ஏராளம் சொத்து இருக்கும், சாப்பாட்டுக்குக் குறைவே இல்லை, ஆனால் அவனது ஜீரண சக்தி கெட்டிருக்கிறது; அவனால் எதையுமே சாப்பிட முடிவதில்லை.

coin1638-620x354

மற்றொருவனுக்கு அசுரத்தனமான ஜீரண சக்தி இருக்கிறது, ஆனால் உண்பதற்கு எதுவும் இல்லை அவனுக்கு. ஒருவன் பணக்காரனாக இருப்பான், அவனுக்கு மக்கட்பேறு இல்லை. மற்றொருவன் சோற்றுக்கே வழி இல்லாத பரம ஏழை, அவனுக்கு ஒரு பட்டாளம் குழந்தைகள் இருக்கின்றன. அவைகளை எப்படிக் காப்பாற்றுவது என்பதே அவனுக்குத் தெரிவதில்லை.

ஏன் இப்படி? ஏனெனில் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் முன்னும் புறமும் போன்றவை. இன்பத்தை அனுபவிப்பவன் துன்பத்தையும் அனுபவித்தே தீர வேண்டும். துன்பம் இல்லாமல் இன்பம் மட்டும் நமக்குக் கிடைக்கும் என்ற முட்டாள்தனமான எண்ணம் நமக்கெல்லாம் இருக்கிறது. இந்த எண்ணம் நம்மீது செலுத்தும் அளவற்ற ஆதிக்கத்தால் நாம் புலன்களை அடக்கும் ஆற்றலையே இழந்துவிட்டோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s