நீ உயர்ந்தவன் ஆக முடியும்!

நீ உயர்ந்தவன் ஆக முடியும்!
– ராமானுஜம்

இளம் நண்பர்களே! இளைஞர்களின் புதிய சிந்தனைகளுக்கும் முதியோரின் அனுபவங்களுக்கும் ஒரு பாலமாக அமைந்து, இந்தக் கூட்டம் புனே நகரின் செழுமைக்கு வழிகாட்டும் என்று நம்புகிறேன்.

உலகின் பல்வேறு துறைகளில் இளைஞர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பின் விளைவே இன்றைய இந்தியா.

சுவாமி விவேகானந்தர், மனதின் ஒருமுகப்பட்ட சக்தியன்றி, வேறு எதனால் உலகின் எல்லா ஞானங்களும் பெறப்பட்டன? உலகம் தன் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது. அதைப் பெற நாம் தட்ட வேண்டிய இடத்தில் பலமாகத் தட்ட வேண்டும். அப்பலத்தை நமக்குத் தருவது மன ஒருமுகப்பாடாகும் என்கிறார்.

மனதை ஒருமுகப்படுத்துவதை எவ்வளவு தீவிரமாக்குகிறோமோ, அந்த அளவிற்குப் பலன்களும் கிட்டும். நம் கல்விமுறை இத்தகைய நம்பிக்கையை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும்.

இன்று, எந்த இளைஞனும் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை என்று நான் உறுதிபடச் சொல்வேன். எப்படி?
கனன்று எழும் ஆர்வத் தீ கொண்ட இளைஞர்களின் மனங்களே மூவுலகங்களிலும் பேராற்றலின் பிறப்பிடம்.
நீ வாழ்வில் ஒரு லட்சியம் உடையவனானால், அதற்கான அறிவைப் பெற்று, வெற்றி பெறத் தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்; எதிர்வரும் பிரச்னைகளை உறுதியுடன் தகர்த்தெறிந்து இதய சுத்தியுடன் செயல்பட்டால் நிச்சயமாக உன் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவாய்.

சமுதாயத்தை மாற்றியமைத்த மூன்று மாமேதைகள் இளமையில் எத்தகைய பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது, எத்தகைய போராட்டங்களின் முடிவில் தங்கள் லட்சியங்களை அடைந்தார்கள் என்று பார்ப்போம்.

நீ உயர்ந்தவன் ஆக முடியும்!
மேரியோ கேபெச்சி (Mario Capechi) யின் குழந்தைப் பருவம் கஷ்டங்கள், சவால்கள் நிறைந்ததாக இருந்தது. நான்கு ஆண்டுகள் தன் அன்னையுடன் இத்தாலியின் ஆல்ப்ஸ் பகுதியில் மரப்பலகைகளால் அமைந்த குடிசையில் வாழ்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது அவரது அன்னை மற்ற பொஹீமிய இனத்தவருடன் அரசியல் கைதியாக டாஹாவ்விற்கு (Dachau) அனுப்பப்பட்டார்.

mariocapecchi

ஜெஸ்டபோவினால் (ஹிட்லரின் ரகசிய போலீஸ்) தாம் கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்த அவர், தன் குழந்தையைக் காப்பாற்றுவதற்காகத் தன் உடைமைகள் எல்லாவற்றையும் விற்று, அந்தப் பணத்தை நண்பர்களிடம் கொடுத்திருந்தார்.
சில மாதங்களில் அந்தப் பணம் முழுவதும் கரைந்துவிடவே, தெருக்களிலும் அனாதை இல்லங்களிலும் குழந்தை வாழ வேண்டி வந்தது.

ஒரு வருடமாகத் தேடிய அவரது அன்னை கடைசியாகத் தன் குழந்தையை ரெக்கியோ எமீலியா என்ற நகரத்தின் மருத்துவமனையில் கண்டுபிடித்தார். அப்போது கேபெச்சிக்கு வயது 9. சில வாரங்களில் இருவரும் அமெரிக்கா சென்றனர்.

அங்கு மீண்டும் மூன்றாவது வகுப்பில் சேர்ந்தார். கணிதம் கற்று அதில் 1961-இல் பட்டம் பெற்றார். பௌதிகம் அவரைக் கவர்ந்தபோதும், ஜேம்ஸ். டி.வாட்சனின் அறிவுரைப்படி மாலிகுலர் பயாலஜி பயின்றார்.

மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சியே அவரது லட்சியம். 1980-ல் தொடங்கிய அந்த ஆராய்ச்சி 1984-ல் பலனளித்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எலிகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட அவரது ஆராய்ச்சி இன்று பல வியக்கத்தகு மாற்றங்களை உருவாக்கியுள்ளது.

டாக்டர் கேபெச்சியின் தொழில்நுட்பத்தினால் புற்றுநோயைக்கூட குணப்படுத்தலாம். இந்தச் சாதனைக்காக அவர் 2007-ல் நோபல் பரிசு பெற்றார்.

உன் லட்சியம் உயரத்தில் இருந்தால், நீ யார் என்பது முக்கியமல்ல என்பது இவரிடமிருந்து நாம் கற்கும் பாடம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s