பிராயச்சித்தம்

’Swami Vivekananda in the West – New Discoveries’ என்ற ஆறு தொகுதி நூல்களை எழுதியவர் ‘சகோதரி கார்க்கி’ என்று புகழ் பெற்ற மேரி லூயி பர்க்.

சுமார் 35 வருடங்களுக்கு முன் கேத்ரியிலுள்ள ராமகிருஷ்ண ஆசிரமத்தில் இது நடந்தது.
MarieLouieBerk
‘சுவாமி விவேகானந்தரின் நினைவாலயம்’ என்று பெயர் அமைந்த அந்த ஆசிரமத்தின் அப்போதைய தலைவர் சுவாமி முக்யானந்தர்.

ஒரு நாள் காலை ஐந்து மணி. ஆசிரமத்தின் மேல்மாடிக் கதவுகளைத் தலைவர் சுவாமிகள் திறந்தபோது, வெளியே ஓர் மேலைநாட்டுப் பெண்மணி சுருண்டு முடங்கிப் படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

இரவில் வெளியே விறைக்கும் குளிர்.
நீங்கள் யார்?” – சுவாமி முக்யானந்தர்.
நான்தான் மேரிலூயி பர்க்”

ஓ, இங்கே நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று பரிவுடன் கேட்டார். அப்போது மேரிலூயி பர்க்,

சுவாமிகளே, நான் நேற்று மாலையில் டில்லியிலிருந்து புறப்பட்டு இரவு 9 மணி இங்கு வந்து சேர்ந்தேன். இங்கு வந்தபோது இரவு 9 மணியிலிருந்து காலை 5 மணி வரை ஆசிரமத்தின் கதவு மூடியிருக்கும் என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாமல் வெளியிலேயே இரவு முழுவதும் காத்திருந்தேன்” என்று கூறினார்.

ஓ, கடவுளே, அந்த அறிவிப்பு, வெகுதூரத்திலிருந்து வந்துள்ள உங்களுக்காக அல்ல. நீங்கள் அழைப்பு மணியை அடித்திருக்கலாமே!” என்று மிகுந்த அக்கறையுடன் கேட்டார் அந்த சுவாமி.

அதற்கு மேரி லூயிபர்க், சுவாமிஜி, கவலைப்படாதீர்கள். ஓர் அமெரிக்கர் என்ற முறையில் நான் செய்தது சரியென்றே நினைக்கிறேன். சுவாமி விவேகானந்தர் எங்கள் நாட்டிற்கு வந்தபோது, உலக சமய மாநாடு துவங்குவதற்கு முன் ஓர் இரவு முழுவதும், கடுங்குளிரில் ரயில் நிலையத்தில்
ஒரு பெட்டிக்குள் இரவைக் கழிக்க நேர்ந்தது அல்லவா?

அந்த நிகழ்ச்சிக்குப் பரிகாரமாக – பிராயச்சித்தமாக நான் இன்று இங்கு செய்துவிட்டேன்” என்று பெருமிதத்துடனும் கூறினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s