ஸ்ரீநிவாஸ ராமானுஜம்

ஸ்ரீநிவாஸ ராமானுஜம். அவர் காலத்தைக் கடந்த ஒரு மேதை. தோல்வியால் அவர் துவளவில்லை.
ராமானுஜம் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தார். 13 வயதில் லோனி எழுதிய Trigonometry-ஐப் புரிந்து கொண்டதுடன் தானே சில தேற்றங்களையும் கண்டுபிடித்தார். கணிதத்தில் அரிய திறமையால் பள்ளியில் பல பரிசுகளை வென்றார்.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் படிக்க உதவித் தொகை கிடைத்தது. கணிதம் தவிர மற்ற பாடங்களில் தோற்றதால் அந்த உதவித் தொகையை இழந்தார்.

ராமானுஜன் கேம்ப்ரிட்ஜின் தலைசிறந்த கணிதமேதை ஜி.எச். ஹார்டி (G.H. Hardy) யைத் தன் திறமையால் கவர்ந்தார். ஹார்டிதான் அவரை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். ஹார்டி தம் சமகாலத்து மேதைகளுக்கு நூற்றுக்கு இவ்வளவு என்று மதிப்பெண்கள் அளித்து அவர்களைத் தரப்படுத்தினார்.

பலர் 30-ஐத் தாண்டவில்லை. சிலர் 60-ஐ எட்டினார்கள். ராமானுஜம் மட்டுமே நூற்றுக்கு நூறு பெற்றார். அதனால் அவருக்கும் அவருடைய தாய்நாட்டுக்கும் எவ்வளவு பெருமை!

ஒவ்வோர் எண்ணும் ராமானுஜத்தின் ஆப்த நண்பன் என்று ஓர் அறிஞர் கூறினார்.

ஒவ்வொரு சாம்யத்தையும் (Equation) இறைவனின் எண்ணங்களின் வெளிப்பாடாகக் காண்கிறேன் என்பார் ராமானுஜம். கணிதத்தில் அனந்தம் (Infinite) என்ற கொள்கையை அவர் ஆன்மிகச் சிந்தனையின் வெளிப்பாடாக உணர்ந்தார்.

ramanujam

33 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜம் இந்தியாவில் உயர் கல்வியில் பட்டம் பெறவில்லை; தகுந்த வேலையில்லை. ஆயினும் அயராத உழைப்பு, கணிதத்தின் மீது மாறாத காதல் காரணமாக கணித ஆய்வு செய்து விடைகளைக் காண முயன்றார்.

கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு இடையேயும் கணிதம் ராமானுஜத்தின் உயிர்மூச்சாக இருந்தது. குறுகிய காலத்திலேயே உலகப் புகழ் பெற்றார். ஆக்கபூர்வமான செயலூக்கம் உள்ள மனிதர்கள் தடைகளுக்குத் தடையாய் இருந்து இப்படித்தான் தங்கள் அறிவால் வெற்றி பெறுவார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s