ஒவ்வொரு நாளும் வாழக் கற்றுக் கொள்

ஒவ்வொரு நாளும் வாழக் கற்றுக் கொள்

நாம் ஒரு விமானத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். ஆஹா, மிக நன்றாக இருக்கிறது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு தீவிரவாதி துப்பாக்கி முனையில் ‘நீங்கள் எல்லோரும் கடத்தப்பட்டிருக்கிறீர்கள்’ என்கிறான்.

எப்படி இருக்கும்? பயத்தில் முகமெல்லாம் பேயறைந்த மாதிரி ஆகிவிடுகிறது.
சரி. சிறிது நேரம் கழித்து பசி காதை அடைக்கிறது. உணவு கிடைக்குமா? ஊஹும்.

இரண்டாவது நாள் உடல் கூனிக் குறுகிய நிலையில் ஒரு டம்ளர் நீர் கிடைத்தால் போதும் என்றாகி விடுகிறது. ஹைஜாக் செய்யப்பட்ட விமானத்தில் யார் கொடுப்பார்கள்?

மூன்றாவது நாள், சிறிது நல்ல காற்று கிடைத்தால்கூட போதும் என்றாகிவிடுகிறது. ஆனால், நின்றிருக்கிற விமானத்தில் அதற்கும் அதிக வாய்ப்பில்லை. மரண பயம், கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறோம்.

அந்தச் சமயம் ‘சமரசம் ஏற்பட்டுவிட்டது. எங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது. நீங்கள் அனைவரும் விடுவிக்கப்படுகிறீர்கள்’ என்று தீவிரவாதிகளிடமிருந்து அறிக்கை வெளியாகிறது.

நாம் விமானத்திலிருந்து விரைவாக இறங்கிக் கொண்டு இருக்கிறோம். வானத்தைப் பார்க்கிறோம், பூமியைப் பார்க்கிறோம், மனிதர்களைப் பார்க்கிறோம். எல்லாம் சொர்க்கமாகத் தெரிகிறது.

நான்கு நாட்களுக்கு முன்னும் இவற்றைத்தான் பார்த்தோம். ஆனால் அவை சாதாரணமாகத் தோன்றின; ஒரு சிறப்பும் இல்லை. ஆனால் இப்போது?
அதாவது, நாம் இருக்கும் நிலையிலிருந்து நம்மைக் கீழே தள்ளிவிடுகிறார்கள். மறுபடியும் நாம் முந்தைய நிலைக்கே வருகிறோம். அந்த நிலை சொர்க்கம் போல் நமக்குத் தோன்றுகிறது.

நாம் இப்போது இருக்கும் ‘சாதாரண’ நிலையில் எவ்வளவு பிரச்னை இருந்தாலும், சுய கட்டுப்பாட்டுடன் அதைச் சமாளிக்க வேண்டும். ஒவ்வொரு நொடியிலும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

‘இப்போது’, ‘இந்தக் கணம்’ என்பதுதான் சத்தியம். மற்றவற்றைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இவ்வாறு நம்மை அமைத்துக் கொண்டால் எப்போதும் ஆனந்தம்தான்.

கிரிக்கெட் – ஒரு சிந்தனை

football

கீதையைப் படிப்பதைக் காட்டிலும் கால்பந்து விளையாடுவதன் மூலம் நீ சொர்க்கத்தின் அருகில் செல்லலாம்” என்றார் சுவாமி விவேகானந்தர்.
கிரகிக்கும் திறமை, ஞாபகம், மனப்பக்குவம் இதற்கெல்லாம் உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம் என்று உளவியல் கூறுகிறது.

‘ஓடி விளையாடு பாப்பா… கூடி விளையாடு பாப்பா’ என்று பாடினார் பாரதி.
இன்றைய உலகில் குழந்தைகளின் மனங்களைக் கவர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் விளையாட்டு கிரிக்கெட் எனலாம்.

உடல் ஆரோக்கியம், கூட்டு மனப்பான்மை, தலைமைப் பண்பு, விரைவில் முடிவெடுக்கும் தன்மை இவை இருந்தால்
தான் கிரிக்கெட்டில் வெற்றி அடைய முடியும்.

கிரிக்கெட்டில் பந்தை ஒருவன் வீசுகிறான். மற்றொருவன் மட்டை வைத்துக் கொண்டு அடித்து ஓடுகிறான். அவனுக்கு இரண்டு ரன்கள் தரப்படுகின்றன என வைத்துக் கொள்வோம். அவன் மட்டுமே ஓடினால் போதுமா? மறுமுனையில் உள்ள ரன்னரும் ஓட வேண்டும்.

ஆனால் அவனுக்கு இரண்டு ரன்கள் தரப்பட மாட்டாது. அவன் பேட்ஸ்மேனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அவ்வளவுதான்.
இதில் புரிவதென்ன? நம் நிலைமைக்குத் தக்கவாறு செயல்பட்டு நம் குழு வெற்றி பெறப் பாடு பட வேண்டும். அதில் நமக்கு ஆதாயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் குழுவின் வெற்றி முக்கியம்.

இன்னும் ஒரு முக்கிய விஷயம். பந்தை ஒருவன் வீசும்பொழுது அவன் மனநிலை என்ன? பேட்ஸ்மேனை வீழ்த்துவது. ஆனால் அந்த பேட்ஸ்மேன் என்ன செய்கிறான்? தன்னை வீழ்த்த வந்த பந்தையே தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஒரு பௌண்டரியோ, சிக்ஸரோ அடிக்கின்றான்.

எதையும் தாங்கும் இதயத்துடன் வெற்றி என்ற பழத்தைப் பறிக்க, லட்சியத்துடன், எந்த ஒரு பிரச்னையையும் சமாளிக்கத் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை இது வலியுறுத்துகிறது அல்லவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s