குரு இல்லாமல் அருள் இல்லை

குரு இல்லாமல் அருள் இல்லை

SRK_SV
செல்வன்எஸ்.நாகவேல், (விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.செட்டிப்பாளையம், தாராபுரம்.) வரைந்த ஓவியம்.

எல்லோருமே வீடுபேற்றை அடையலாம். அதற்கு குரு காட்டிய வழியில் செல்வது அவசியம். எல்லோரும் குருவாகி விடமுடியாது. சச்சிதானந்தமே குரு.

ஒருவனது தாய் உண்மையில் பிரம்மத்தின் வடிவம்தான். அவள் பிரம்ம மயமானவள். அவளே குரு.

ஒரே ஒருவர் தான் குரு.அவரே சச்சிதானந்தம்.

எல்லோருமே குருவாக இருக்க விரும்புகிறார்களே தவிர, சீடராக இருப்பதற்கு யார் விரும்புகிறார்கள்?

தூயமனம், தூயபக்தி, பிரார்த்தனை, குருவின் உபதேசம் முதலியவை பக்திக்கு மிகவும் அவசியமானவை.
சத்குரு ஒருவர் கிடைப்பாரானால் சீடனின் அகங்காரம் விரைவில் அடங்கிவிடும்.

பக்குவப்படாத குருவாக இருந்தால் குருவுக்கும் வேதனை; சீடனுக்கும் வேதனை.

பக்குவப்படாத குருவிடம் அகப்பட்டுக் கொண்டால் சீடன் முக்தனாக மாட்டான்.

குரு யாரோ அவரே இஷ்டதெய்வம். குருவே இஷ்ட தெய்வத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

குரு சீடனின் கையைப் பிடித்து இறைவனைக் காணும் வழியில் சீடனை அழைத்துஸ் செல்கிறார்.
ஒருவனுக்கு குருவின் அருள் கிடைத்து விட்டால், அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.
‘இந்தக்காரியங்களை செய். இவற்றை செய்யாதே’ என்று குரு உபதேசம் செய்கிறார். பிறகு அவரே பயன் கருதாமல் சில காரியங்களை செய்யும்படி உபதேசிக்கிறார்.

சீடன் சிறிதேனும் ஞானசாதனை பழகினால், குரு அவனுக்கு ஒவ்வொன்றையும் தானே விளக்குவார்.

குருவின் அருளால் மெய் ஞானம் பெற்ற பிறகும், ஒருவன் உலக வாழ்க்கையில் இருந்தபடியே ஜீவன்முக்தனாக வாழ முடியும்.

குரு, சாது, மகாத்மாக்கள் ஆகியவர்களைப் பார்க்கஸ் செல்லும் போது வெறும்கையோடு போகக்கூடாது என சாஸ்திரம் விதித்துள்ளது.

பலருக்கு குருஅவசியம். அதைவிட இன்றியமையாதது குருவின் வார்த்தையில் நம்பிக்கை.

குருவைக் கடவுளாகக் காண்பவன் வெற்றி அடைவான்.
எட்டு பந்தங்களான வெட்கம், வெறுப்பு, பயம், சாதிப்பெருமை, குலப்பெருமை, ஆணவம், துன்பம், இழிவுஆகியவற்றை குருவின் துணையில்லாமல் அவிழ்க்க இயலாது.

குருவின் உபதேசத்தைக் கேட்டதும் உண்மையான பக்தனின் மனம் சலனமின்றி ஒரே நிலையில் நிற்கும்.
உண்மையான பக்தன் குருவின் மொழியை நன்கு புரிந்து கொண்டு, அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஆற்றல் பெற்றிருப்பான்.

குருவிடம் இறைவனை அடையும் மார்க்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.
தீட்சை தரும் குருவைஸ் சாதாரண மனிதனாக நினைக்கக்கூடாது. அவரை ஈசுவரனாகவே, இறைவனின் பிரதிநிதியாகவே நினைக்க வேண்டும்.

மனமுருகி இறைவனை அழைக்க வேண்டும். ‘என்ன செய்தால் இறைவனை அடையலாம்’ என்று குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குரு பூரண ஞானியாக இருந்தால்தான் சீடனுக்கு வழிகாட்ட முடியும்.
– ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s