தன்னலமற்ற அன்பு

தன்னலமற்ற அன்பு

மார்ச் 1899.
கல்கத்தா நகரம் முழுவதும் பிளேக் என்ற கொடும் நோய் காட்டுத்தீ போல பரவி இருந்தது.
எங்கு பார்த்தாலும் குப்பையும், சாக்கடையுமாக கல்கத்தா மரணத்தை வரவேற்கத் தயாராக இருந்தது. ஆண்கள் வீட்டின் வாயிலில் கூட்டமாக அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்ப்பதும், தங்கள் நிலையைக் குறித்துப் புலம்புவதுமாக இருந்தனர்.
sister-vivekanand
அப்போது கழுத்தில் ருத்ராக்ஷமும், கருணையும், கம்பீரமுடனும் வெள்ளை கவுன் தரித்து, அங்கு வந்த ஒரு பெண்மணி களத்தில் இறங்கினார்.

தானே சாக்கடையில் இறங்கிச் சேற்றை வாரி வெளியில் கொட்டினார். துடைப்பத்தால் தெருவைச் சுத்தம் செய்தார்.
சோம்பேறிகளாய், அழுக்கிலே வாழ்ந்து பழகிய அந்த ஆண்கள் அப்போதும் அப்பெண்மணியை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களின் செயலைக் கண்டு வெட்கித் தலைகுனிந்தனர். சிறிது நேரம் கடந்தது.
அந்த தெய்விகப் பெண்மணியின் தாக்கத்தால் சில சோம்பேறி நரிகள் சுறுசுறுப்புச் சிங்கங்களாய் மாறிச் சுத்தப்படுத்தும் பணியில் தாமும் பங்கேற்றன.

சேவையைத் தன் செயலின் மூலம் மக்களுக்கு உணர்த்திய அப்பெண்மணி சகோதரி நிவேதிதைதான். சுவாமி விவேகானந்தரின் அன்பு மகளல்லவா அவர்!

நகரின் அவல நிலை நீங்க சகோதரி பணியின் முதல் கட்டமாக ஒரு சுகாதாரக் குழுவை அமைத்தார். சீர்திருத்தக் குழுவின் இளைஞர்கள் எறும்பென பரவிச் சுற்றுப்புறத்தைச் சுகாதாரபுரமாக மாற்றினர். நோயுற்றவர்களுக்குச் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பிளேக்கின் பேயாட்டம் நின்றபாடில்லை. எங்கும் அவல நிலை!

மரணத்தையும் நேசி என்று நிவேதிதைக்கு சுவாமிஜி கூறியது அங்கு சோதிக்கப்பட்டது.
சகோதரியின் தலைமையில் இளைஞர்களின் பணி தொடர்ந்தது. அவரது குழுவினர் 30 நாட்கள் தன்னலமில்லாது பாடுபட்டனர். அந்நாட்களில் சகோதரி பால் பழங்களை மட்டும் உண்டு வாழ்ந்து வந்தார்.

சில தினங்களில் நோயாளிகளின் மருந்துச்செலவுக்காக அவர் பாலையும் தவிர்த்தார்.
கடைசியில் மரணம் அவர்களது காலில் மண்டியிட்டது. தம் உயிரைத் துச்சமென மதித்து அவர்கள் ஆற்றிய சேவை நூற்றுக்கணக்கான பேரை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியது.

அத்தாயின் சேவையுள்ளம் நமக்கும் வரட்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s