விவேகானந்தருக்கு ராதையின் காட்சி

சுவாமி விவேகானந்தரின் கனவில் ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றி, உனக்கு கோபி ராதையைக் காட்டுகிறேன்” என்றார்.

நரேந்திரர் (விவேகானந்தர்) அவரைப் பின் தொடர்ந்தார். சிறிது தூரம் சென்ற பிறகு அவர் பக்கம் திரும்பி, நீ வேறு எங்கே போவாய்?” என்று கேட்டுத் தாமே பேரழகு மிக்க ராதையாக உருமாறினார் குருதேவர்.

இந்தக் காட்சி, நரேந்திரரின் மனதில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கியது.
தமது பிரம்மசமாஜத் தொடர்பின் காரணமாக, இதுவரை கடவுளை உருவமற்ற பிரம்மமாகவே துதித்துப் பாடல்களைப் பாடி வந்த நரேந்திரர், இதன் பிறகு ராதையின் பிரேம பக்தியைக் குறித்த பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.
இந்த அனுபவத்தைப் பற்றி நரேந்திரர் தமது சகோதரச் சீடர்களிடம் கூறியபோது, அவர்கள் பெரிதும் வியந்து, நடந்ததை நீ நம்புகிறாயா? அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டாயா?” எனக் கேட்டனர். கண்டிப்பாக நம்புகிறேன்” என்றார் நரேன்.

சுவாமி விவேகானந்தருக்கு ராதையின் காட்சி கிடைத்ததற்குப் பின்னால் ஓர் ஆன்மிக ரகசியம் பொதிந்துள்ளது.

வைகுந்தநாத் சன்யால் என்ற பக்தர் இது பற்றி எழுதினார்:
ஒருவர் மிகப் பெரிய துறவியாகவோ, பண்டிதராகவோ இருக்கலாம்; ஆனாலும் அவரிடத்தில் இருக்கும் சம்ஸ்காரங்களை ஒதுக்கிவிட முடியாது. கடவுளின் விருப்பப்படி சம்ஸ்காரங்கள் கிளம்புகின்றன; அடங்குகின்றன. தம்மிடமிருந்த சம்ஸ்காரங்கள் அல்லது தார்மிகக் கோட்பாடுகள் அல்லது மேல்நாட்டுக் கல்வி…
ஏதோ ஒன்றின் காரணமாக நரேந்திரரால் ராதையை ஏற்க முடியவில்லை. இறைவனது ஆனந்தத்தின் அம்சமாகிய ராதையை நரேந்திரர் ஒதுக்கித் தள்ளினார்.

குருதேவர் நினைத்தார் : ‘நரேந்திரன் தெய்விகப் பிரேமையின் சொரூபமாகிய ராதையை மதிக்காது போனால், வாழ்க்கையின் இனிமையான, மகிழ்ச்சிமிக்க ஒரு பகுதி அவனுக்குக் கிடைக்காமலேயே போய்விடும். பிரேமை என்பதே இல்லாது போய்விட்டால், தாம் (குருதேவர்) தொடங்கி வைத்துள்ள ஆன்மிகப் பாரம்பரியத்தில் வருபவர்களுக்கு நரேந்திரரால் வழிகாட்ட முடியாமல் போய்விடும்’.
இதற்கு முன்னரே, குருதேவர் தமது சங்கல்பத்தின் மூலம் நரேந்திரருக்கு நிர்விகல்ப சமாதியின் அனுபவத்தை அருளியிருந்தார்.

நரேந்திரருக்குப் பிரேம பக்தியின் அனுபவத்தையும் அருளித் தரும் முகமாக, ஸ்ரீராமகிருஷ்ணர் படுக்கையின் மீது தமது விரலால், ஸ்ரீமதி ராதே! நரேந்திரன் மீது அருள்புரி” என எழுதினார்.
அதன் பலனாய் உடனே, மந்திரம் போட்டது போலவோ அல்லது ஒரு மாபெரும் சக்தி ஆட்கொண்டுவிட்டது போலவோ, நரேந்திரரிடம் ராதையின் உணர்வு உண்டாகியது.

Sri Sri Radha-Murlidhar, presiding deities of the East Village Temple in New York City

Sri Sri Radha-Murlidhar, presiding deities of the East Village Temple in New York City

உடனே அவர், ஓ, ராதே, தெய்விகப் பிரேமையின் வடிவினளே! நீ எங்கே இருக்கிறாய்?” என்று பிரார்த்தித்தார்.
இதுவரை ஒரு ஞானியாய் இருந்த நரேந்திரர், மூன்று நாட்கள் இதே மனோநிலையில் சாதனை செய்த பிறகு, இளகிய இருதயம் பெற்றவராகி, குருதேவரின் அருளால் நான் இப்போது ஒரு புத்தொளி பெற்றேன்! இந்தப் பிரேம அனுபவத்தை மட்டும் நான் பெறாமல் போயிருந்தால், எனது வாழ்க்கையே வறண்டு, சுவையற்றுப் போயிருக்கும்” என்றார்.
ஆதாரம்: ‘சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s